இந்திய விமானங்களில் தற்கொலை படை தாக்குதல்?புலனாய்வுதுறை எச்சரிக்கை
ஆமதாபாத்திலிருந்து, மும்பைக்கும், மும்பையிலிருந்து கொச்சிக்கும் இன்று அதிகாலை செல்லும் விமானங்களில், தற்கொலை படையைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளதாக, புலனாய்வு அமைப்பு, பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. இதைஅடுத்து, இந்த மூன்று விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய புலனாய்வு அமைப்பிடமிருந்து, விமான போக்குவரத்து இயக்குனரகத்துக்கு, ஒரு எச்சரிக்கை கடிதம் வந்துள்ளது.
அதில், குறிப்பிடப்பட்டுஉள்ளதாவது:இன்று அதிகாலை, குஜராத் மாநிலம் ஆமதாபாத்திலிருந்து, மும்பைக்கு செல்லும் ஏர் - இந்தியா விமானத்திலும்,
மும்பையிலிருந்து, கேரளாவின் கொச்சிக்கு செல்லும் விமானத்திலும், தற்கொலை படை பயங்கரவாதிகள் பயணிக்க வாய்ப்புள்ளதாக ரகசிய தகவல் கிடைத்து
உள்ளது. எனவே, மும்பை, ஆமதாபாத், கொச்சி ஆகிய விமான நிலையங்களில், கண்காணிப்பையும், பாதுகாப்பையும் மேலும் பலப்படுத்த வேண்டும். விமானத்தில், ஏறும், இறங்கும் பயணிகள் அனைவரையும், முழுமையாக தீவிர சோதனைக்கு உட்படுத்த வேண்டும். இந்த இரண்டு விமானங்களில் மட்டுமல்லாது, இந்த விமான நிலையங்களில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களிலும் பயணிக்கும் பயணிகளையும், தீவிர சோதனைக்கு உட்படுத்த வேண்டும்.நாட்டின் மற்ற விமான நிலையங்களிலும், கண்காணிப்பையும், பாதுகாப்பையும் பலப்படுத்த வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, விமான போக்கு வரத்து இயக்குனரக வட்டாரங்கள் கூறியதாவது:

நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களும், ஏற்கனவே தீவிர கண்காணிப் பில் உள்ளன. பாதுகாப்பும் கடுமையாக்கப்பட்டுள்ளது. தற்போது வந்துள்ள எச்சரிக்கையை அடுத்து, பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது பண்டிகை காலம் என்பதால், அனைவரும் கொண்டாட்ட மனநிலையில் இருப்பர் என்றும், போதிய பாதுகாப்பு இருக்காது என்றும் கருதி, தாக்குதல் நடத்துவதற்கு இந்த காலத்தை பயங்கரவாதி கள் தேர்வு செய்திருக்கலாம். ஆனாலும், எந்த ஒரு சிறு அசம்பாவிதத்துக்கும் இடம் கொடுக்காத வகையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.