பள்ளிவாசல் உடைப்பு ; பார்வையிட இராணுவம் மறுப்பு..
கிண்ணியா,வெள்ளைமணல் கரிமலையூற்று பள்ளிவாயல், கடந்த சனிக்கிழமை (16) இரவு முற்றாக உடைக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாகவும் அதனை பார்வையிடுவதற்காக நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) குறித்த இடத்திற்கு சென்ற போது, இராணுவத்தினர் தம்மை செல்லவிடாது தடுத்துள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு குறித்த பிரதேசத்தில் கடும் மழை பெய்ததாகவும் இந்த நேரத்தில் பள்ளிவாயல் உடைக்கப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் கூறுகின்றனர்.அதனையடுத்து குறித்த இடத்தைப் பார்வையிடச் சென்ற பொதுமக்களும் பிரதேச முக்கியஸ்தர்களும் பள்ளிவாயல் நிர்வாகத்தினரும் இராணுவத்தினரால் அனுமதி மறுத்துக்கப்பட்டு திரும்பியுளனர்..
2007ஆம் ஆண்டு முதல் குறித்த பிரதேசம் இராணுவத்தின் கட்டுபாட்டில் உள்ளதுடன் 2009ஆம் ஆண்டு, குறித்த பிரதேசத்தில் வசித்த மக்கள் வெளியேற்றப்பட்டிருந்தனர்.
இசம்பவம் தொடர்பில் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரியவை தொடர்பு கொண்டு கேட்ட போது, சம்பவம் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என கூறினார்.
இந்த பள்ளிவாயல் 1733ஆம் ஆண்டு கட்டப்பட்டதுடன் 400 வருடங்கள் பழமை வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.