Breaking News

தலைநகர் சென்னை பற்றி சில சுவாரசிய தகவல்கள்...



  இந்தியாவிலேயே நகர எல்லைக்குள் தேசிய பூங்காவை கொண்டிருக்கும் ஒரே ஊர் சென்னை தான். கிண்டி தேசிய பூங்கா தான் அந்த பூங்கா
☛ இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் ஆங்கிலேயே ரெஜிமென்ட் சென்னையில் தான். இப்போது இருக்கும் ராணுவத்தின் ரெஜிமென்ட்களில் மூத்த ரெஜிமென்ட்டும் மெட்ராஸ் ரெஜிமன்ட் தான்.
☛ இந்தியாவின் முதல் ரேடியோ சேவை சென்னையில் இருந்து தான் துவக்கப்பட்டது. பிரசிடன்சி ரேடியோ க்ளப் என்று கிருஷ்ணஸ்வாமி செட்டியால் துவங்கப்பட்ட இந்த ரேடியோ சர்வீஸ் துவங்கி, ஆறு ஆண்டுகளுக்கு பிறகு தான் அரசே ரேடியோ சேவையை துவங்கியது. 
☛ ஆளுனர் க்ரிபோர்ட் அவர்களால் 1682 இல் துவங்கப்பட்ட மெட்ராஸ் வங்கி தான் இந்தியாவின் முதல் வங்கி .
☛ ஆசியாவின் முதல் கண் மருத்துவமனை துவக்கப்பட்டதும் சென்னையில் தான். Madras Eye Infirmary என்று பெயர்கொண்ட கண் மருத்துவமனை உருவான வருடம் 1819 !
☛ இந்தியாவின் முதல் நோக்ககம் எழுந்ததும் சென்னையில் தான். இருநூற்றி இருபது ஆண்டுகளுக்கு முன் நுங்கம்பாக்கத்தில்எழுந்தது. இந்தியாவின் முதல் திரிகோண அளவையியல் நடைபெற்றது சென்னை பரங்கி மலையில் !
இந்தியாவிலேயே முதன் முதலில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுத்திட்டத்தை கொண்டு வந்தது மெட்ராஸ் மாநகராட்சி தான். 
☛ விடுதலைக்கு முந்திய நீதி கட்சியின் ஆட்சி காலத்தில் தான் இந்தியாவிலேயே கோயில் நிலங்களை நிர்வகிக்கும் அறநிலையத்துறை உருவானது  .
☛ கிண்டி பொறியியல் கல்லூரி தான் இந்தியாவின் மிக பழமையான பொறியியல் கல்விக்கூடம் ஆகும். இந்தியாவில் மெக்கானிகல்,எலெக்ட்ரிகல் ஆகிய துறைகளில் பொறியியல் பாடத்தை முதன் முதலில் ஆரம்பித்தது இங்கே தான்.
☛ இந்தியாவின் முதல் கார்பரேசன் சென்னை கார்பரேசன் தான். உலகின் இரண்டாவது பழமையான கார்பரேசன் அது தான். இது உருவாக காரணம் ரிப்பன். எனவே அவர் பெயரால் கார்பரேசன் கட்டிடமானது ரிப்பன் கட்டிடம் என்று பெயரிடப்பட்டது.