வெளிவந்துவிட்டது : மக்கா – மதீனாக்கிடையிலான புகையிரதத்தின் புகைப்படங்கள்!
புதிதாக அமைக்கப்பட்டு வரும் மக்கா – மதீனா இடையிலான புகையிரதப் போக்குவரத்து பாதை எதிர்வரும் 2016 நடுப்பகுதியில் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்படும். இந்நிலையில் அதற்கான புகையிரதத்தின் புகைப்படங்களை அதகுப் பொறுப்பான நிறுவனத்தின் தலைவர் தனது ட்விட்டரில் பதிவேற்றியுள்ளார்.
ஸ்பெயினிலேயே தயாரிக்கப்படும் இப்புகையிரதம் மணிக்கு 300 கி.மி. வேகத்தில் செல்லும் எனவும், அதில் இன்டர்நெட் வசதிகள் வழங்கப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
நன்றி : مفكرة الإسلام
கருத்துகள் இல்லை