Breaking News

இரண்டு நொடியில் விற்று தீர்ந்தது ரெட்மி 1எஸ்..

                             

சீனாவின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் ஷியோமி நிறுவனத்தின் தயாரிப்பான ரெட்மி 1எஸ் இன்று விற்பனைக்கு வருவதாக அதனை விற்கும் இணையதளமான ஃப்ளிப்கார்ட் அறிவித்திருந்தது. இதனால் பல லட்சம் பேர் இதனை வாங்குவதற்காக ஆன்லைனில் காத்திருந்ததுனர். சரியாக 2 மணிக்கு துவங்கிய விற்பனையில் 2 நொடிகளில் அனைத்து புக்கிங்களும் முடிந்து விற்பனை முடிந்தது என்ற அறிவிப்பு கணினி திரையில் தோன்றியது.

                           
இந்த விற்பனையில் செல்போனை வாங்கிய தூத்துக்குடியை சேர்ந்த ஒருவர் ''இந்த போனை புக் செய்வதற்காக ஒரு வாரத்திற்கு முன்பே முன்பதிவு செய்து வைத்திருந்தேன். தற்போது இன்று 2 மணிக்கு புக்கிங் நேரம் என்பதால் அதற்காக அதிக இன்டர்நெட் வசதி கொண்டு புக்கிங்கிற்காக காத்திருந்தால் தான் கிடைக்கும் என்பதால் சரியாக அதன் கவுண்ட் டவுன் எண்ணிக்கை குறைந்தது புக் செய்தோம் சரியான நேரத்தில் க்ளிக் செய்ததால் கிடைத்தது இல்லை என்றால் அடுத்த வாய்ப்பை எதிர்பார்த்து காக்க வேண்டி இருக்கும் என்றார்.

                                  
புக்கிங்கை தவறவிட்ட சென்னையை சேர்ந்த ஒருவர் கூறுகையில் ''நான் எவ்வளவோ முயற்சி செய்து இன்று புக் செய்ய வேண்டும் என்று இருந்தோம் ஆனால் முடியவில்லை காரணம் ஒரே நேரத்தில் 3.5 லட்சம் பேர் ஆன்லைனில் காத்திருக்கிறார்கள் அவர்களில் யார் முதல் 40000 க்ளிக்குகளை செய்கிறார்களோ அவர்களுக்கு தான் கிடைக்கும் என்பதால் இன்று புக் செய்ய முடியவில்லை அடுத்த வாய்ப்பிற்காக காத்திருக்கிறேன் என்றார்.