சிங்கப்பூர், தமிழ் வாலிபர் கொலை, 2 பேர் கைது
சிங்கப்பூரில் மேற்கு கடலோர நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தொழில் பேட்டையில் ஏற்பட்ட தகராறில், தமிழ்நாட்டைச் சேர்ந்த முருகையா சுரேஷ் குமார் (வயது 26) என்பவர் கடந்த மாதம் 23–ந் தேதி தாக்குதலுக்கு ஆளானார். அவரது தலை, கழுத்து பகுதிகளில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தார். தகவல் அறிந்த சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, சக தமிழரான திருப்பதி வீரபெருமாள் என்பவரை கடந்த புதன்கிழமை கைது செய்தனர். இந்த நிலையில் சிங்கப்பூரில் பணிபுரியும் தமிழகத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் பிரபாகரன் (27), செல்லப்பன் சங்கர் (28) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.