ஜெயலலிதாவுடன் சிறையில் ஓ.பன்னீர் செல்வம் உட்பட 4 அமைச்சர்கள் ஆலோசனை!
ஜெயலலிதாவுடன் சிறையில் ஓ.பன்னீர் செல்வம் உட்பட 4 அமைச்சர்கள் ஆலோசனை நடத்திவிட்டு சென்னை திரும்பி உள்ளனர்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேரும் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பெங்களூரு சிறையில் உள்ள ஜெயலலிதாவை தமிழக அமைச்சர்கள் 4 பேர் இன்று சந்தித்து பேசினார்கள். தமிழக அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ஜெயலலிதாவை சந்தித்து அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதாவுடன் ஆலோசனை நடத்திவிட்டு 4 அமைச்சர்களும் விமானத்தில் சென்னை திரும்பி உள்ளனர்.