ஒடிஷாவில் நிலநீர் உயிர் வாழ் உயிரினங்கள் பற்றிய ஆய்வாளர்கள் விஷமேயில்லாத புதிய வகை பாம்பு ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.

கஞ்சன் மாவட்டத்தில் ஸ்னேக் ஹெல்ப் லைன் மூலம் இந்தப் பாம்பு கொண்டு வரப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. இது ஒடிஷாவில் கண்டுபிடிக்கப்பட்டதால் ஒடிஷாவின் புகழ் பெற்ற நடனவகையான ஒடிசி என்ற பெயர் வருமாறு லைகோடான் ஒடிசி என்று இந்தப் பாம்புக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்தப் பாம்பை பற்றிய ஆராய்ச்சி ரஷ்யாவின் ஹெர்பிடாலஜி இதழில் வெளிவந்துள்ளதாக இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை லைகோடான் ஜாரா என்ற பாம்பு வகையுடன் இது முன்பு குழப்பிக் கொள்ளப்பட்டது. ஆனால் இது முற்றிலும் வேறு வகை என்று இப்போது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதன் உடலில் விஷம் கிடையாது. மேலும் இது பல்லிகளை உணவாக தின்று உயிர் வாழும் பாம்பு என்பது குறிப்பிடத்தக்கது.