வெளிநாடுகளில் பணிபுரியும் நண்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை!
கடந்த வாரம் சிங்கப்பூரில் வேலை செய்யும் தமிழக நண்பர் ஒருவருக்கு, சிங்கப்பூர் ICA ஆபீஸிலிருந்து (Immigration and Checkpoint Authority) பேசுவதாக ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
இவரும் இணையதளத்தில் சோதனை செய்த போது அந்த நம்பர் சரியானதகவே இருந்துள்ளது.
உடனே நண்பர் முழுமையாக நம்பி என்ன விஷயம் என்று கேட்க.. ''நீங்கள் கடந்தாண்டு இந்தியா சென்று திரும்பி வரும்போது இமிக்ரேசன் கார்டில் தங்களது பிறந்த வருடத்தை தவறாக எழுதிக்கொடுத்து மோசடியாக வந்துள்ளீர்கள்.
இது சட்டப்படி மிகப்பெரிய குற்றம். உங்களை இன்றே சிங்கப்பூருக்கு திரும்பி வர இயலாத அளவுக்கு ப்ளாக் செய்வதுடன் மட்டுமில்லாமல், சட்டபடி கடும் தண்டனை வழங்கப்படலாம்.
இது சம்பந்தமாக விசாரனை செய்து, இதிலிருந்து தப்பிக்க, உச்சநீதிமன்றத்தின் மூலம் உங்களுக்கு வக்கீல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே வக்கீல் கட்டணம் மற்றும் இதர அலுவலக செலவுகளுக்காக நாங்கள் சொல்லும் தொகையை உடனடியாக செலுத்தினால், வக்கீல் தேவையான ஆவணத்துடன் உங்களிடம் விசாரனை நடத்தி கையெழுத்து பெற்று செல்வார்.
மேலும் இந்த அழைப்பு முக்கிய ஆதாரத்திற்காக ரெக்கார்ட் செய்யப்படுகின்றது.
எனவே வேறு யாரிடமும் தகவல் பரிமாறவோ அல்லது கட் செய்யவோ கூடாது என்று சொல்லி, "அரவிந்த் கச்சோரி" என்ற பெயருக்கு 1000 டாலர் +950 டாலர் +698 டாலர் என்று தனித்தனியே வெஸ்டர்ன் யூனியன் மூலம் உடனடியாக இந்தியாவிற்கு அனுப்புங்கள் என்று ஆங்கிலத்தில் மிகத்தெளிவாக பேசியுள்ளனர்.
இவரும் பயந்து போய் 1000 டாலர் அப்புறம் 950 டாலர் அனுப்பி விட்டு அவர்களுக்கு வெஸ்டர்ன் யூனியன் தரும் சீக்ரெட் எண்ணை அவர்களுக்கு தெரிவித்த பின்னர், ''சரி நாங்கள் செக் செய்கிறேன் அதுவரை எங்களது உயரதிகாரியிடம் பேசுங்கள்'' என்று சொல்லி வேறு ஒருவருக்கு கால் மாற்றப்பட்டுள்ளது.
அந்த இரண்டாம் நபர் பேசும் பேச்சில் சிறிது சந்தேகம் வரவே, உடனடியாக வெஸ்டர்ன் யூனியனின் அலுவலரிடம் சொல்லி பணத்தை ப்ளாக் செய்ய முயற்சி செய்திருக்கிறார்.
அதற்குள் (அதாவது 7 நிமிடத்திற்குள்) அங்கே பணத்தை எடுத்து விட்டார்கள்.
அந்த அழைப்பை கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேல் கட் பண்ணாமல் பேசிக்கொண்டிருந்திருக்கிறா
உடனே நண்பர், சிங்கப்பூர் காவல்துறைக்கு அழைத்து தகவல் சொன்ன போது, ''இந்த நூதன மோசடி இந்தியாவிலிருந்து கடந்த ஏப்ரல் முதலே நடந்து வருகிறது.
இது தொடர்பான எச்சரிக்கை ICA வெப்சைட்டிலே தெரிவிக்கப்பட்டுள்ளது'' என்று கூறியுள்ளார்கள்.
அவர் இழந்த தொகை கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய். நண்பர்களே இது ஒரு விசித்திரமான நவீன மோசடி.
இது போல பலவிதமான மோசடி கால்கள் உங்களுக்கும் வரலாம். ஏமாறாதீர்கள். தயவு செய்து இந்த செய்தியை தங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்...