Breaking News

விமானத்தில் ரசாயன பொருட்களை எடுத்துச் செல்ல தடை..

                              
சென்னை: பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராசன், சென்னையில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்படுகிறது. அப்போது, தேசிய புலனாய்வு அதிகாரிகள் நடத்திய விசாரணையில், சென்னை உள்பட பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், சென்னைக்குள் வரும் வெளியே செல்லும் வாகனங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும், அருண், விமான பயிற்சி பெற்றுள்ளதாகவும், விமான மூலம் சென்னை உள்ளிட்ட இடங்களை தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக சென்னையில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் மூலம் பயணம் செய்யவரும் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்படுகிறது. 

அவர்கள் எடுத்து செல்லும் பைகளில் திரவ பொருட்கள் கொண்டு செல்ல முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள் ளது. குறிப்பாக ரசாயன கலவைகள், ஜெல், ஒருசில வாசனை திரவியம், அமிலம் ஆகியவற்றுக்கு முழுவதுமாக தடைவிதிக்கப்பட்டது. நேற்று காலை முதல் சர்வதேச மற்றும் உள்நாட்டு முனையங்களில் பயணிகளை கடுமையான சோதனைக்கு பின்னரே, விமானத்தில் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் நேற்று காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து கொழு ம்பு செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் இலங்கையை சேர்ந்த விக்னேஷ் (40) பயணம் செய்ய வந்தார். 

அவர் வைத்திருந்த கை பையை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, 2 ஜாடிகளில் 2 கிலோ பாதரசம் இருந்தது தெரியவந்தது.அதனை எடுத்து கொண்டு பயணம் செய்ய கூடாது. அதனை, வெளியே வீசிவிடுங்கள் அல்லது உங்களை வழியனுப்ப வந்தவர்களிடம் கொடுத்துவிடுங்கள் என விக்னேஷிடம், அதிகாரிகள் கூறினர். அதற்கு மறுப்பு தெரிவித்த அவர், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட் டார். ஆனாலும், அவரை விமானத்தில் பயணம் செய்ய, அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. நீண்ட நேர வாக்குவாதத்துக்கு பின், விக்னேஷின் பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள், அவரை விமான நிலையத்தில் இருந்து வெளியேற்றினர்.