அரசு இணையதளத்தில் ஜெ., விவரங்கள் நீக்கம்..
தமிழக அரசு இணையதளங்களில், முதல்வருக்குரிய பகுதியில், ஓ.பன்னீர்செல்வத்தின் விவரங்கள், நேற்று மாலை பதிவேற்றப் பட்டன.தமிழக அரசின் இணையதளத்தில், முதல்வர், அமைச்சர், எம்.எல்.ஏ.,க் களின், வயது, கல்வி தகுதி, முகவரி, அரசில் அவர்கள் வகித்த மற்றும் வகிக்கும் பதவிகள் குறித்த தகவல்கள், புகைப் படங்களுடன் உள்ளன.
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், கவர்னர் மாளிகையில், நேற்று பகல், 1:25 மணிக்கு பதவியேற்றுக் கொண்டனர். இதை தொடர்ந்து, இந்த விவரங்களில், நேற்று மாலை, மாற்றங்கள் செய்யப்பட்டன.
முதல்வருக்குரிய பகுதியில், ஜெயலலிதாவின் புகைப்படம் மற்றும் அவர் பற்றிய விவரங்கள் நீக்கப்பட்டு, முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படம் மற்றும் அவரை தொடர்பு கொள்வதற்கான, தொலைபேசி எண், பேக்ஸ் எண் ஆகியவை வெளியிடப்பட்டு உள்ளன.ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில், அமைச்சராக இருந்தவர்கள், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவையிலும் தொடருவதால், அவர்கள் குறித்து, அரசு இணைய தள விவரங்கள், ஏற்கனவே இருந்தது போல தொடர்கின்றன.