அம்பானியை முந்திய அலிபாபா ஜாக் மா: ஐபிஓ எதிரோலி
ஒரு சாதாரண ஆங்கில ஆசிரியரால் இதை செய்ய முடியுமா என்று யோசிக்கக் கூடிய விஷயத்தை செய்திருகிறார் ஜாக். இப்போது அந்த ஆங்கில ஆசிரியர் ஆசியாவின் இரண்டாவது பெரும் பணக்காரர்! சீனாவின் இ- காமர்ஸ் ஜாம்பவானான அலிபாபா ஐபிஓவில் வரலாறு படைத்ததோடு மட்டுமல்லாமல் அதன் நிறுவனர் ஜாக் மா'வை (வயது 50) ஆசியாவின் இரண்டாவது பெரும் பணக்காராக்கியுள்ளது!
கடந்த வாரம் அலிபாபா நிறுவனம் ஐபிஓ வந்தது. பங்கு நியூயார்க் சந்தையில் பட்டியலிட்டப் போது ள் 38% உயர்ந்து $93.89 என முடிந்தது. இதன் மூலம் அலிபாபாவின் நிகர மதிப்பு 231 பில்லியன் டாலர்களாக உயர்ந்தது இதில் ஜாக் மாவின் பங்கு மட்டும் 26.5 பில்லியன் டாலர்கள்!
புலூமேர்க் பில்லினியர்ஸ் தகவலின்படி $ 23.2 பில்லியன்களுடன் மூன்றாவதாக இருந்த இந்தியாவின் முகேஷ் அம்பானியையும், $ 25.1 பில்லியன்களுடன் இரண்டாவதாக இருந்த சீனாவின் லீ ஷா கீ'யையும் முந்தி ஒரே பாய்ச்சலில் ஆசியாவின் இரண்டாவது பெரும் பணக்காரராக உருவாகியுள்ளார் மா!