Breaking News

ஹஜ்ஜிற்காகத் தயாராகிக் கொண்டிருக்கும் முஸ்லிம்களே!உங்களுக்கு டாக்டரின் சில டிப்ஸ்!



உங்களுடைய ஹஜ் ஆரோக்கியமாக அமைய வேண்டுமெனில் நீங்கள் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். உங்கள் பயணத்தில் நீங்கள் சில முக்கிய மருந்துகளை எடுத்துச் செல்லுங்கள்.

1.வலி நிவாரணக் களிம்புகள் (Ointment)


2.முகமூடிகள் (Face Mask)


3.சாதாரண காய்ச்சலுக்குண்டான மாத்திரைகள்4.நீங்கள் ரத்த அழுத்தம் அல்லது நீரழிவு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவரானால் அவற்றுக்குரிய மருந்துகளை உங்கள் பயண காலத்திற்குக் கணக்கிட்டு மொத்தமாக வாங்கி எடுத்துச் செல்லுங்கள்.


5.இருமல் சளிக்கான மருந்துகளை (Syrup) பிளாஸ்டிக் குப்பிகளில் எடுத்துச் செல்லுங்கள்.

6.தூக்க மாத்திரைகளும், வலி நிவாரணத்திற்குப் பயன்படுத்தும் சில மாத்திரைகளும் சவூதி அரசில் தடை செய்யப்பட்டவையாகும். என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கொஞ்சம் பஞ்சினை (Cotton) மருந்துடன் வைத்துக் கொள்ளுங்கள். குளிர்காலத்தில் காதுகளை அடைத்துக் கொள்ள உதவும்.

நோயுள்ளவர்கள் தங்களுடைய மருத்துவச் சீட்டினை ( Medical Records ) அவசியம் எடுத்துச் செல்ல வேண்டும்.

ஜம் ஜம் தண்ணீரை அதிகம் பருகுங்கள். அது நோய் தீர்க்கும் அரு மருந்தாகும்.

எனவே ஹாஜிகளே! உங்கள் ஹஜ்ஜை ஆரோக்கியமாக நிறைவேற்றுங்கள். சுறுசுறுப்பாக வணக்க வழிபாடுகளில் ஈடுபடுங்கள்! உங்களுடைய ஹஜ்ஜை ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக இறைவன் ஆக்கியருள் புரிவானாக!

நன்றி :Dr. ஜெ. முகைதீன் அப்துல் காதர் MBBS, MS