Breaking News

நாகூரில் இளம் எழுத்தாளர்.. ( அஹமது ரிஸ்வான் )

                                           


கடந்த காலங்களில் நாகூர் எத்தனையோ கவிஞர்கள் ,எழுத்தாளர்கள் , பாடகர்கள், நாடக கலை, அரசியல் பிரமுகர்கள் , தொழில் அதிபர்கள், ஆராய்ச்சியாளர்கள் , ஆன்மிக சிந்தனையாளர்கள், ஆகியோர்களைப் பெற்றிருக்கிறது என்பது நாகூர் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிக்கப்பட்ட உண்மை.
                           
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்று  பாட்டுக்கோர் புலவன் பாரதி , பைந்தமிழ் சாரதி சொன்னதை நாகூர் எழுத்தாளர் நாகூரி அப்துல் கய்யும் அண்ணன் அவர்களின் இணையத்தள முகப்பில் போட்டு இருப்பார்கள். தமிழ் வளர்த்த நாகூர் பெருமக்களின் கனவு இன்று நனவாகின்றது என்று தான் சொல்ல வேண்டும்.

 நாகூரும் தமிழும் என்ற தலைப்பில் நாகூர் சங்கம் சிங்கபூர் வெளியிட்ட முப்பெரும் விழா சிறப்பு  மலரில் டாக்டர் முனைவர் நாகூர் M.A.காதர் அவர்கள் நாகூர் இல்லாமல் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு இல்லை என்பதை கோடிட்டுக்காட்டி, தமிழிலக்கியத்திற்கு நாகூர் படைப்பாளிகளின் பங்கு என்ன என்பதையும் , அவர்களின் பெயர்களையும் எழுதியிரிந்தார்கள் . அதைப் படித்த பிறகு தமிழ் வளர்ச்சிக்கு நாகூர் பெருமக்களின் பங்களிப்பை அறிந்து கொள்ள முடிந்தது. இன்றும் எழுத்தாளர்களின் அறியப்பணி தொடர்கிறது என்று அக்கட்டுரையை முடிகின்றார் முனைவர் காதர் அவர்கள், அந்த வரிசையில்


நாகூரைச் சார்ந்த 21 வயதான இளம் எழுத்தாளர் அஹமதுரிஸ்வான்.
( FACEBOOB ID ) Ahamed Rizwan 
நற்றமில் வளர்த்த நாகூருக்கு நானும் பெருமை சேர்ப்பேன் . மண்ணின் பெருமை காக்க தோன்றியோரில் நானும் ஒருவன். சீரான சிந்தனையால் திறம்பட கருத்தை வடிப்பேன் என்றும், நாகூரானுக்கு எழுத்தும் கூர்மை தான் " நா" மட்டும் அல்ல என்று பிறந்த மண்ணுக்கு பெருமை சேர்க்க களம் இறங்கியுள்ளார். 

இவர் எழுதிய கட்டுரைகள் :


"எனது கவலை"


"வேட்டியும் கைலியும் அநாகரிக ஆடைகளா?"

"காசாவில் தொடரும் இனப்படுகொலை"

"யார் மீது குற்றம்"

போன்ற கட்டுரைகளை படித்த போது இவரின் சீரிய சிந்தனையும், சமூக அக்கறையையும் அறிந்துக் கொள்ள முடிகின்றது.

இன்றைய நவின காலத்தில் இவரைப் போன்ற இளையர் எழுத்தாளராய் உருவாவது வரவேற்கத் தக்கது. இவரைப்போன்ற இளம் எழுத்தாளர்களை உருவாக்குவதில் மூத்த எழுத்தாளர்கள் ஆக்கமும் ஊக்கமும் அளித்து இவரை சிகரம்தொடச் செய்ய வேண்டும்.