Breaking News

குற்றங்களை ஒழிக்க ரியாத்தில் நேரடியாக களத்தில் இறங்கிய மன்னரின் மகன்.

Untitled

ஆப்ரிக்காவின் எரித்திரியா மற்றும் சோமாலியா நாடுகளிலிருந்து கள்ளத்தனமாக சவுதிக்குள் புகுந்த நபர்கள் நிறைய உள்ளனர். இவர்கள் நாட்டின் வறுமையை கருத்தில் கொண்டு சவுதி அரசும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் விட்டு வைத்திருந்தது.
ஆனால் நாளாக நாளாக இவர்களின் சட்ட விரோத செயல்கள் அதிகரிக்கத் தொடங்கின. வழிப்பறி, போதை மருந்து, விபசாரம் என்று எந்த பயமும் இல்லாமல் சுதந்திரமாக செய்ய ஆரம்பித்தனர். தட்டிக் கேட்கும் காவலர்களையும் சவுதி நாட்டவரையும் கூட்டாக சேர்ந்து தாக்கவும் செய்தனர்.
ஒரு தமிழருக்கு நேர்ந்த உண்மை சம்பவம். தமிழரின் இரு சக்கர வாகனத்தை இரண்டு ஆப்ரிக்கர்கள் இரவு பத்து மணி வாக்கில் பறித்து சென்ற சம்பவம் போன வருடம் நடந்தது. அந்த தமிழர் வேகமாக பத்தாவிலிருந்து தனது இருப்பிடம் நோக்கி வந்து கொண்டிருந்த போது ஆள் அரவம் இல்லாத பகுதியில் அவரின் பின்னால் மற்றொரு இரு சக்கர வாகனம். அவருக்கு விபரம் புரியாமல் திரும்பி பார்த்தார். இரண்டு ஆப்ரிக்கர்கள். அவரிடம் ‘வண்டியை நிறுத்து’ என்று சொல்ல அவர் வண்டியை மேலும் வேகப்படுத்தினார். அவர்களும் அவர் பின்னாலேயே வந்தனர்.
ஒரு கட்டத்தில் அவர்கள் தள்ள இவர் அவர்களிடமிருந்து தப்பிக்க வழி பார்க்க இந்த விளையாட்டு ஐந்து நிமிடம் நீடித்தது. முடிவில் பின்னால் அமர்ந்திருந்தவன் தனது காலால் அவரது வண்டியை வேகமாக உதைத்துள்ளான். பிறகென்ன வண்டி சறுக்கியதால் கீழே விழுந்துள்ளார். அவருக்கு முழங்காலில் பயங்கரமான அடி. பேண்ட் பாதி கிழிந்து விட்டது. சுதாரித்துக் கொண்டு எழுந்து பார்க்கும்போது அவர்கள் கையில் கத்தியும், பெரிய சுத்தியலும் இருந்தது. பணத்துக்காக எதையும் செய்ய துணிந்தவர்கள் போல் தோன்றினர்.
‘உனக்கு என்ன வேணும்?’
‘இந்த இரு சக்கர வாகனம் வேணும்’
‘இது ஹராம் இல்லையா’
‘அதிகம் பேசாதே’ என்று கத்தியை காட்டியுள்ளான்.
வேறு வழியில்லாமல் வண்டியிலிருந்து பொருள்களை எடுத்துக் கொண்டு வண்டியை அவர்களிடம் கொடுத்துள்ளார். வேறு வழியில்லாமல் இருப்பிடம் திரும்பி அவரது ஓனரிடம் விபரங்களை சொல்லியுள்ளார். ‘அவர்களிடம் சண்டையிடாமல் வண்டியை கொடுத்தது நல்லது. வண்டி போனால் வாங்கிக் கொள்ளலாம். உனக்கு எதாவது ஆகியிருந்தால்! இறைவன் காப்பாற்றிக் கொண்டான்’ என்று தாயுள்ளத்தோடு ஓனர் பேசியுள்ளார்.
அந்த வண்டி அவரது கம்பெனியினுடையது. ‘இரு சக்கர வாகனத்தில் இனி செல்லாதே’ என்று சொல்லி நான்கு சக்கர வாகனத்தையே தற்போது ஓனர் கொடுத்துள்ளார். ஒரு கெட்டதில் நல்லது என்ற சந்தோசம் அவருக்கு. (இந்த சம்பவம் கட்டுரையாளர் சுவனப்பிரியனுக்கு நேர்ந்தது)
இந்த சம்பவத்தை இங்கே குறிப்பிட காரணம்  அந்த அளவு மோசமான ஆப்ரிக்கர்களும் அங்கு வாழ்கிறார்கள்  என்பதை சொல்வதற்கே!
இரண்டு நாட்களுக்கு முன்பு ரியாத்தில் உள்ள மன்ஃபுஹா என்ற இடத்தில் சோதனை நடத்தியது அரசு. அதிகாலை நான்கு மணிக்கு இந்த சோதனை தொடங்கியது. இந்த முறை மன்னரின் மகன் துர்கி பின் அப்துல் அஜீஸ் அவர்களே நேரிடையாக சோதனையில் ஈடுபட்டார். குறுகிய சந்துகளில் அவர் புகுந்து ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த பலரை பிடித்துக் காவலர் வசம் ஒப்படைத்தார்.
மன்னர் சோதனை செய்ய புறப்படுகிறார்..
turki+walk
பூட்டப்பட்ட வீடுகள் காவல்துறையினரால் உடைக்கப்படுகின்றன.
turki+door+damaged
ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த ஒரு ஆப்ரிக்கனை காவல் துறை பிடிக்கிறது.
turki+bin+abdullah
பூட்டிய வீடுகளை தட்டி அங்கு சோதனையிடுகிறார்
turki+enter+house
ஒரு வீட்டில் மூன்று ஆண்களும் மூன்று பெண்களும் கள்ளத்தனமாக எந்த ஆவணங்களுமின்றி தங்கியிருந்தனர். அவர்களையும் பிடித்தனர்.
turki+ladies+catched
முறையான ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த பல பெண்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வாகனத்தில் ஏற்றப்பட்டனர்.
turki+ladies
சோதனைகள் முழுவதும் முடிந்தவுடன் களைப்பு தீர தண்ணீர் அருந்துகிறார் இளவரசர் துர்கிபின் அப்துல் அஜீஸ்.
turki+water
ஒரு ஆட்சித் தலைவரின் மகனுக்குரிய இலக்கணம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறார் அப்துல் அஜீஸ். 
இதனை இவருக்கு கற்றுக் கொடுத்தது இஸ்லாம் என்றால் மிகையாகாது. என்ன ஒரு எளிமை. என்ன ஒரு கம்பீரம். தனது நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக தூக்கத்தை தொலைத்து அதிகாலை நான்கு மணிக்கு காவல்துறையோடு வந்த இளவரசர் துர்கி பின் அப்துல் அஜிஸ் பாராட்டப்பட வேண்டியர். 
நம் நாட்டு அரசியல்வாதிகள் இவர்களிடம் பாடம் படிக்க வேண்டும்.