ஃபேஸ்புக், டுவிட்டரின் போட்டிகளை சமாளிக்க முடியவில்லை -ஆர்குட் (Orkut) இழுத்து மூடப்படுமா !
ஃபேஸ்புக், டுவிட்டரின் போட்டிகளை சமாளிக்க முடியவில்லை – அளறும் ஆர்குட் (Orkut)
ஃபேஸ்புக் தொடங்கப்பட்ட அதே ஆண்டில் கூகுள் நிறுவனத்தால் தொடங்கப்பட்ட ஆர்குட் வரும் செப்டம்பர் மாதல் முதல் தனது சேவையை நிறுத்த போவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2004 ஆம் ஆண்டு பேஸ்புக் மற்றும் ஆர்குட் ஆகிய இரண்டு சமூக இணையதளங்களும் அடுத்தடுத்த சில மாதங்கள் இடைவெளியில் தொடங்கப்பட்டது. ஆனால் உலக அளவில் இன்று முதலிடத்தை ஃபேஸ்புக் பிடித்திருக்கும் நிலையில் போட்டிகளை சமாளிக்க முடியாமல் பார்வையாளர்களின் ஆதரவை இழந்த ஆர்குட் மூடப்படுகிறது.
ஆரம்பத்தில், பிரேசில் மற்றும் இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்த ஆர்குட், ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களின் அபார வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியது.
இதற்கு மேலும் தாக்கு பிடிக்க முடியாது என்ற நிலை வந்துவிட்டதால் ஆர்குட் நிறுவனம் தனது சேவையை இம்மாதம் செப்டம்பர் 30ஆம் தேதி முடித்துக்கொள்ள இருப்பதாகவும், இருப்பினும் அதன் வாடிக்கையாளர்களின் தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவற்றை சேமித்து வைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் கூகுள் கூறியுள்ளது.
ஆர்குட் வலைத்தளத்திற்கு பிரேசில் நாட்டில் மட்டும் 48.4 சதவிகிதம் பயனாளிகள் இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நாட்டு மக்களுக்க் இதுவொரு வருத்தமான முடிவுதான் ஆர்குட் நிறுவனத்துடன் தொடங்கப்பட்ட ஃபேஸ்புக் தற்போது 1.28 பில்லியன் உறுப்பினர்களுடன் சமூகவலைத்தளத்தில் முதலிடம் பிடித்துள்ளது.