தமிழகத்தில் நாளை முதல் அமலுக்கு வருகிறது: தனியார் பால் லிட்டருக்கு ரூ.2 உயர்வு: ஆவின் பால் விலையில் மாற்றம் இல்லை
தமிழகத்தில் உள்ள மக்கள் பயன்பாட்டிற்கு தினமும் 1½ கோடி லிட்டர் பால் தேவைப்படுகிறது.தனியார் பால்தமிழக அரசு நிறுவனமான ஆவின் மூலம் 23½ லட்சம் லிட்டர் பாலையே சப்ளை செய்ய முடிகிறது. ஏனைய ஒரு கோடியே 26 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் பால் தனியாரால் சப்ளை செய்யப்படுகிறது.
அரசு நிறுவனமான ஆவின் மூலம் கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் ஒரு லிட்டர் ரூ.35-க் கும், சமன்படுத்தப்பட்ட பால் ரூ.31-க்கும், நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.27-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில், மாத அட்டை வைத்திருப்பவர்களுக்கு, இந்த விலையில் இருந்து லிட்டருக்கு ரூ.2 குறைத்து வழங்கப்படுகிறது.நாளை முதல்ரூ.2 உயர்வுஆனால், தனியார் பால் நிறுவனங்கள் கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பாலை ஒரு லிட்டர் ரூ.46-க்கும், சமன்படுத்தப்பட்ட பாலை ரூ.42-க்கும், நிலைப்படுத்தப்பட்ட பாலை ரூ.38-க்கும், கொழுப்பு சத்து நீக்கப்பட்ட பாலை ரூ.34-க்கும் விற்பனை செய்கின்றன.
இந்த நிலையில், பால் கொள்முதல் விலை உயர்வு, மூலப்பொருட்களின் விலை உயர்வு போன்றவற்றை காரணம் காட்டி, தனியார் பால் நிறுவனங்கள் நாளை (திங்கட்கிழமை) முதல் லிட்டருக்கு ரூ.2 விலை உயர்த்துகின்றன.
அதன்படி இனி, கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் ஒரு லிட்டர் ரூ.48-க்கும், சமன்படுத்தப்பட்ட பால் ரூ.44-க்கும், நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.40-க்கும், கொழுப்பு சத்து நீக்கப்பட்ட பால் ரூ.36-க்கும் விற்பனை செய்யப்படும்.
ஆவின் பால் விலை உயர்வு இல்லைஅரசு நிறுவனமான ஆவின் கடந்த 2012-ம் ஆண்டு பால் விலையை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தியது. அதன் பிறகு பால் கொள்முதல் விலையை 3 முறை உயர்த்தியபோதும் விற்பனை விலையை உயர்த்தவில்லை.
ஆனால், தனியார் பால் நிறுவனங்கள் 2012-ம் ஆண்டுக்கு பிறகு 10 முறை பால் விலையை உயர்த்தியுள்ளன. இந்த ஆண்டில் மட்டும் 4-வது முறையாக பால் விலையை உயர்த்துகின்றன.குழு அமைக்க கோரிக்கைதமிழகத்தில் 30-க்கும் மேற்பட்ட தனியார் பால் நிறுவனங்களும், ஆந்திராவில் 10 தனியார் பால் நிறுவனங்களும் உள்ளன. ஆனால், ஆந்திராவில் உள்ள 4 பெரிய தனியார் நிறுவனங்களே தன்னிச்சையாக பால் விலையை உயர்த்திக்கொள்கின்றன என்று குற்றம்சாட்டப்படுகிறது.
இதுகுறித்து, தமிழ்நாடு பால் முகவர்கள் நலச்சங்க மாநில தலைவர் எஸ்.ஏ.பொன்னுசாமி கூறியதாவது:-
தமிழ்நாட்டில் வசிக்கும் 15 சதவீத மக்கள் பால் வாங்கக்கூட முடியாத நிலையில் உள்ளனர். ஆனால், தனியார் பால் நிறுவனங்கள் மட்டும் இந்த ஆண்டில் பால் விலையை லிட்டருக்கு ரூ.8 உயர்த்தியுள்ளன. இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக நால்வர் குழுவை தமிழக அரசு நியமிக்க வேண்டும். இந்த குழுவில் ஐ.ஏ.எஸ். அதிகாரி, மக்கள் பிரதிநிதி, தனியார் பால் நிறுவன பிரதிநிதி, சங்க நிர்வாகி ஆகியோர் இடம்பெற வேண்டும். இந்த குழு அரசுக்கு அளிக்கும் அறிக்கையை வைத்தே பால் விலை உயர்த்தப்பட வேண்டும். தன்னிச்சையாக பால் விலையை உயர்த்துவதை தடுக்க வேண்டும்.இவ்வாறு எஸ்.ஏ.பொன்னுசாமி கூறினார்.