Breaking News

இந்தியாவில் வெளியான சோனி எக்ஸ்பீரியா இசட் 3 மாடலின் 10 முக்கிய சிறப்பம்சங்கள்

                    இந்தியாவில் வெளியான சோனி எக்ஸ்பீரியா இசட் 3 மாடலின் 10 முக்கிய சிறப்பம்சங்கள்
http://tamil.gizbot.com/mobile/10-impressive-features-sony-xperia-z3-launched-india-008257-pg1.html #sonyxperiaz3

இந்தியாவில் சிறந்த ஸ்மார்ட்போன் நிறுவனமாக கால்பதிக்க நிதானமாகவும் ஆழமாகவும் கால் பதித்து வருவம் சோநி நிறுவனம், இதற்கு முக்கிய காரணம் சோனி எக்ஸ்பீரியா இசட் 3. இது சிறப்பான அம்சங்களோடு அந்நிறுவனத்தின் பெயரில் வெளியான புதிய ஸ்மார்ட்போன். புதிய எக்ஸ்பீரியா இசட் 3 அதன் முந்தைய மடலை விட கச்சிதமாக வடிவமைக்கப்பட்டிகுப்பதற்கு உதாரணமாக இதன் கேமரா மற்றும் பேட்டரியை குறிப்பிடலாம். 

இந்த புதிய மாடல் மெலிதாக இருப்பதோடு வேகமாகவும் இயங்குவது மற்ற மாடல்களுக்கு கடும் போட்டியாக அமைகிறது. இதில் டூயல் லென்ஸ் கேமரா பொருத்தப்பட்டிருப்பதோடு சிறப்பான அம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சோனி எக்ஸ்பீரியா இசட் 3 ஐபோன் 6 மாடலை விட விலை குறைவு என்பதோடு ஐபோன் 6 ப்ளஸை விட ரூ.11,900 குறைவாகவே கிடைக்கிறது. ஆன்டிராய்டு கருவி இந்திய சந்தையில் ரூ.50,000 க்கு கிடைக்கின்றது. 

சோனி எகஸ்பீரியா இசட் 3 முக்கிய சிறப்பம்சங்கள் எக்ஸ்பீரியா இசட் 3 5.2 இன்ச் மற்றும் 1920*1080 ரெசல்யூஷனில் முழு எஹ்டி டிஸ்ப்ளே இருப்பதோடு ட்ரைலூமினஸ் டிஸ்ப்ளே எக்ஸ் - ரியால்டி மொபைல் பிக்சர் இன்ஜீன் வசதியை மேம்படுத்தும். இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 801 எஸ்ஓசி மற்றும் 5.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் சிபியு மற்றும் 4ஜி எல்டிஈ மோடெம் மற்றும் ஆட்ரீனோ 330ஜிபியு கொண்டுள்ளது. ஸ்விஃப்ட் மல்டி டாஸ்க்கிங் வசதிக்காக சோனி இதில் 3 ஜிபி ராம் கொடுத்துள்ளது. இது கூகுளின் ஆன்டிராய்டு 4.4 கிட்காட் ஓஎஸ் மூலம் இயங்குகிறது. 

கேமராவை பொருத்த வரை எல்ஈடி ப்ளாஷ் மற்றும் ஆட்டோ போகஸ் வசதி கொண்ட 20.7 எம்பி ப்ரைமரி கேமராவும் 2.2 எம்பி முன் பக்க கேமராவும் உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 16 ஜிபி இன்டெர்னல் மெமரியோடு கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் உள்ளது. 4ஜி, எல்டிஈ, ஏஜிபிஎஸ்/குலோனஸ், ப்ளூடூத் 4.0, டிஎல்என்ஏ, என்எப்சி, நேட்டிவ் யுஎஸ்பி டெத்தெரிங் சின்க்ரோனைசேஷன், யுஎஸ்பி ஹை ஸ்பீடு 2.0, மைக்ரோ யுஎஸ்பி சப்போர்ட், வைபை மற்றும் ஹாட்ஸ்பாட் இதன் அம்சங்களை அலங்கரித்துள்ளதோடு சோனி எக்ஸ்பீரியா இசட் 3 3100 எம்ஏஎஹ் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. 


இந்த பேட்ட்ரி 19 மணி நேர, மற்றும் 740 மணி நேர ஸ்டான்ட்பை கொடுக்கும். பெரிய ஸ்கிரீன் மற்றும் சிறப்பான மல்டிமீடியா ஆப்ஷன் கொண்ட ஸ்மார்ட்போன்களை எகிர்ப்பார்த்தவர்களுக்கு சோனி எக்ஸ்பீரியா இசட்3 சிறந்த தேர்வாக இருக்கும். மேலும் சிறப்பான வடிவமைப்பு மற்றும் பல புதிய அம்சங்கள் இதில் இருக்கின்றது.