Breaking News

5000 கார்கள் 8000 ஊழியர்கள் ! யுஏஇல் கார் தொழிலில் முண்ணனியில் தமிழர்



துபாய் : ஐக்கிய அரபு எமிரேட்சில்(யுஏஇ)  அரேபியா ஹோல்டிங் நிறுவனத்தின் அரேபியா டாக்சியில்  5000த்திற்கும் மேற்பட்ட  கார்கள் இயக்கப்பட்டு அமீரகத்தில் சொந்தமாக அதிக வாடகை கார்களை  கொண்டுள்ள நிறுவனமாக அரேபியா டாக்சி முன்னிலை வகிக்கிறது.வேலை வாய்ப்பில் அவர்களின் பணி தகுதிக்கு ஏற்றவாறு தமிழர்களுக்கு முன்னுரிமை தரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் நிறுவனரில் ஒருவரும் துணை சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குநருமாக திகழ்பவர் பிஎஸ்எம் ஹபீபுல்லாஹ் இவர் வறட்சி மாவட்டமாக கருதப்படும் ராமநாதபுரம் மாவட்டத்தின் கீழக்கரையை சேர்ந்தவர். இந்நிறுவனத்தில் தென் இந்தியாவை சேர்ந்த குறிப்பாக தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என  அவர் தெரிவித்தார். 

இது குறித்து அவர் கூறியதாவது ,

அரேபியா டாக்சி நிறுவனம் தொடங்கி பத்து ஆண்டுகளாகி விட்டது.இங்கு பணியாற்றும் ஓவ்வொரும் ஒரே குடும்பத்தின் அங்கத்தினர் போன்று உழைத்து இந்த நிறுவனத்தை வெற்றிகரமாக செலுத்துகிறார்கள். வேலை வாய்ப்பில் அனைத்து நாடுகளை சேர்ந்தவர்களும் இங்கு பணியாற்றுகிறார்கள்.

வேலை வாய்ப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கிறோம். விரைவில் தமிழகத்தில் இத்தொழிலை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். என்றார்.இவர் இது தவிர ஏராளமான உணவகங்கள் உள்ளிட்ட பல் வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார்..