Breaking News

ஆசிய விளையாட்டில் பதக்கத்தை ஏற்க மறுத்த இந்திய வீராங்கனை அதிகாரிகள் மீது சரமாரியாக சாடல்..

                                   

சர்ச்சைக்குரிய அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய வீராங்கனை மிகவும் வேதனை அடைந்து தனக்கு அளித்த வெண்கலப் பதக்கத்தை ஏற்க மறுத்துவிட்டார். இதனால் பார்வையாளர்கள் மற்றும் அதிகாரிகள் பெரிதும் அதிர்ச்சி அடைந்தனர்.  

ஆசிய விளையாட்டில் பெண்களுக்கான குத்துச்சண்டையில் லைட்வெயிட் பிரிவின் (57-60 கிலோ) அரைஇறுதியில் அனுபவம் வாய்ந்த இந்தியாவின் 

எல்.சரிதாதேவியும், தென்கொரியாவின் ஜினா பார்க்கும் நேற்று கோதாவில் இறங்கினர். இந்த ஆட்டத்தில் ஆரம்பத்தில் இருந்தே சரிதாதேவி ஆக்ரோஷம் காட்டினார். எதிராளி நிலைகுலையும் அளவுக்கு சரமாரி குத்துகளை விட்டார். சரிதாதேவியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் தடுமாறியதை காண முடிந்தது. ஆனால் 3 பேர் கொண்ட நடுவர்கள் குழு 2-வது ரவுண்டில் மட்டுமே சரிதாதேவிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. 

மற்ற மூன்று ரவுண்டுகளிலும் நடுவர்களின் அதிகபட்ச கருணை என்னவோ ‘உள்ளூர் வாசி’ மீது விழுந்து விட்டது. இதனால் சிறப்பாக செயல்பட்ட போதிலும் துரதிர்ஷ்டவசமாக 0-3 என்ற கணக்கில் சரிதா  தேவி வெற்றி வாய்ப்பை இழக்க நேரிட்டது. சரிதாதேவி தான் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களும், ஜினா பார்க்கின் கையை நடுவர் பிடித்து உயர்த்தியதை கண்டு வியப்படைந்தனர். நடுவர்களுக்கு எதிராக அங்கிருந்த நமது நாட்டு ரசிகர்கள் குரல் எழுப்பினார்கள். சிலர் தண்ணீர் பாட்டில்களையும் தூக்கி எறிந்தனர். ‘நீங்கள்  குத்துச்சண்டையை கொன்று விட்டீர்கள்’ என்று சரிதாவின் கணவர் கோஷமிட்டார்.  


இந்திய குத்துச்சண்டை குழுவினரும் கடும் அதிருப்திக்குள்ளானர்கள். தனக்கு அநீதி இழைக்கப்பட்டதை நினைத்து வேதனை தாங்காமல் சரிதாதேவி கண்ணீர் விட்டு அழுதார். முன்னாள் ஆசிய சாம்பியனான 32 வயதான சரிதாதேவி மணிப்பூரைச் சேர்ந்தவர். இதைத் தொடர்ந்து இந்திய அதிகாரிகளும் நடுவர்களின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய செய்வதில் தோல்வி அடைந்துவிட்டனர். என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தொடந்து மனம் கலங்கிய நிலையிலே சரிதா தேவி காணப்பட்டார். போட்டி முடிந்த பின்னர் பரிசு அளிக்கப்பட்டது. பரிசு அளிக்கப்பட்ட இருந்த அரங்கிற்கு வந்த சரிதா தேவிக்கு பதக்கம் வழங்கப்பட்டது. ஆனால் அவர் பதக்கத்தை ஏற்க மறுத்துவிட்டார். பதக்கத்தை கழுத்தில் அணியவும் மறுத்துவிட்டார். பின்னர் பதக்கத்தை அங்கேயே வைத்துவிட்டு வந்துவிட்டார். பின்னர் பதக்கம் உரிய அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. பதக்கம் அளிக்கப்பட்ட அரங்கில் தொடர்ந்து அழுத வண்ணமே சரிதா தேவி இருந்தார். இது அங்கு இருந்தவர்கள் மனதை கலங்க செய்தது. 

இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்கால குத்துச்சண்டை வீரர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் வண்ணம் போட்டியிட போகிறேன். இது ஏற்றுக் கொள்ள முடியாது. என்று சரிதா கூறினார். மேலும் அவர் இந்திய அதிகாரிகளை சரமாரியாக சாடியுள்ளார். "இச்சம்பவம் நடந்து 24 மணிநேரம் நடந்தும் எந்த ஒரு அதிகாரியும் என்னுடன் பேசவரவில்லை. நன்றாக இருக்கிறேனா என்று கூட கேட்கவில்லை. இந்திய அதிகாரிகள் பதக்கம் பெறுபவர்களுடன் போட்டோ எடுக்க மட்டும் அருகே வருகிறார்கள். வேறு எதுவும் செய்வது இல்லை." என்று சரமாரியாக தனது குற்றச்சாட்டை சரிதா தேவி முன்வைத்துள்ளார்.