பேஸ்புக் தளத்திலுள்ள வீடியோக்களை சுலபமாக தரவிறக்கம் செய்வதற்கு..
பில்லியன் வரையான பயனர்களை தன்னகத்தே கொண்டு மாபெரும் சமூக இணையத்தளமாக உருவெடுத்து நிற்கின்றது பேஸ்புக்.
இத்தளமானது நண்பர்கள் வட்டத்தை பெரிதாக்கிக் கொள்ள உதவுவதோடு, தற்போது வீடியோக்களை பகிரும் தளமாகவும் சிறிது சிறிதாக மாறிவருகின்றது. எனினும் இங்கு பகிரப்படும் வீடியோ கோப்புக்களை தரவிறக்கும் வசதி தரப்படுவதில்லை.
இதனால் குறைப்பட்டுள்ள பயனர்களுக்கு அந்த குறையை நீக்கும் முகமாக தற்போது Facebook Video Download எனும் கூகுள் குரோம் நீட்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நீட்சியை நிறுவிக் கொண்டதும் குரோமில் URL பகுதிக்கு அடுத்ததாக Facebook Video Download – இற்குரிய ஐகான் தென்படும்.
பின்னர் பேஸ்புக் தளத்தில் காணப்படும் வீடியோவை ஓப்பன் செய்த பின்னர், குறித்த ஐகானில் கிளிக் செய்தவுடன் தோன்றும் விண்டோவில் Download என்பதை கிளிக் செய்ததும் குறித்த வீடியோ தரவிறக்கம் செய்யப்படும்.