Breaking News

நீங்கள் மடிக்கணினி பயன்படுத்துகிறீர்களா?

                              

இன்று மடிக்கணினி (லேப்டாப்) பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகம். அது, உடன் ஒரு செயலாளர் இருப்பதைப் போலவும், கூடவே அலுவலகத்தை எடுத்துச்செல்வதைப் போலவும் பலருக்கு இருக்கிறது.

நமக்கு பயன்படும் மடிக்கணினியை பாதுகாத்துப் பராமரிக்க வேண்டியது அவசியம். பொதுவாகவே பெரும்பாலானவர்கள் மடிக்கணினியை கவனமாகப் பயன்படுத்தி வந்தாலும், அதை முறைப்படி எந்தச் சூழ்நிலையில், எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது யாருக்கும் தெரியாமல் உள்ளது.

சந்தையில் ‘லேட்டஸ்டாக’ வந்திருக்கும் மடிக்கணினியை வாங்கினால் மட்டும் போதுமா? அதைப் பாதுகாக்கும் வழிமுறைகளை பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டாமா?

மடிக்கணினிக்கு ஏற்படக்          கூடிய பாதிப்புகள், அவற்றை எப்படித் தவிர்ப்பது என்பது குறித்து இங்கே பார்ப்போம்...

அச்சுறுத்தும் வைரஸ்

மடிக்கணினி மட்டுமின்றி, அனைத்து விதமான கணினிகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருப்பது இந்த வைரஸ்கள்தான். இதனால் மடிக்கணினியில்      ஆன்டிவைரஸ் இருப்பது என்பது முக்கியமாக உள்ளது. ஒரு தரமான ஆன்டிவைரஸ் மென்         பொருளை விலை கொடுத்து வாங்கி, உங்கள் மடிக்கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள்.

வெப்பம்

உங்கள் மடிக்கணினி அதிகம் சூடாகாமல் பார்த்து கொள்ளுங்கள். விளையாட்டு, திரைப்படம் போன்றவற்றில் மூழ்கி, நம்மையும் அறியாமல் மடிக்கணினியை அதிகநேரம் ‘ஆன்’ செய்து வைத்திருக்க வாய்ப்புள்ளது. கவனமாக அதைத் தவிர்க்கப் பாருங்கள். மடிக்கணினியை எப்போதும் நேரடி சூரிய வெப்பத்தில் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் நேரடி வெப்பம், மடிக்கணினியைப் பாதிக் கும்.

சேதப்படுத்தல்

பலரும் அவசரத்தில் பென்       டிரைவை நெட்வர்க் கனெக்டர்களிலும், எங்கு எல்லாம் யுஎஸ்பி போல் காணப்படுகிறதோ அங்கு எல்லாம் நுழைக்கவும் முயற்சிப்போம்.இதனால் மடிக்கணினி யுஎஸ்பி, ஆடியோ மற்றும் நெட்வர்க் கனெக்டர்கள் சேதமடை யும் வாய்ப்பு இருக்கிறது. அவை சேதமடையாமல் பயன்படுத்த வேண்டும்.

தூசு ஆபத்து

உங்கள் மடிக்கணினி எந்தச் சூழலிலும் தூசு படியாமல் பார்த்து கொள்ளுங்கள். இதற்கு, மடிக்கணினி பயன்படுத்தாத சமயத்தில் அதற்குரிய ‘பேக்’கில் பாதுகாப்பாக எடுத்து வைக்க வேண்டும்.

முறையான பொருட்களால் சுத்தம்


மடிக்கணினியை சுத்தம் செய்ய நினைக்கும் எண்ணம் சரியானதுதான். ஆனால் சிலர் வீட்டை சுத்தம் செய்யும் பொருட்களை கொண்டு மடிக்கணினியையும் சுத்தம் செய்ய முயல்வார்கள். இது தவறு. எப்போதுமே மடிக்கணினியைச் சுத்தம் செய்வதற்கு என்று உள்ள பொருட்களைக் கொண்டே அதைச் சுத்தம் செய்ய வேண்டும்.

புகைக்காதீர்கள்

மடிக்கணினி அருகில் புகை பிடித்தால் உங்கள் உடலைப் போலவே மடிக்கணினியையும் அது பாதிக்கும். மேலும் எப்போதும் மடிக்கணினியை சமையலறை   யில் பயன்படுத்துவதை தவிர்த்துவிடுங்கள்.

விளையாடக் கொடுக்காதீர்கள்


சிலர் குழந்தைகளுக்கு மடிக்      கணினியில் ‘கேம்ஸ்’ போன்றவற்றை விளையாட அனுமதி கொடுப்பார்கள். அவர்களுக்கு மடிக்கணினியை கவனமாகப் பயன்படுத்தத் தெரியாது. எனவே இதைத் தவிர்த்து விடுங்கள்.

ஹார்டு டிரைவ் பாதுகாப்பு


எல்லா மடிக்கணினிகளிலும் ‘ஷாக் புரூப்’ இருக்கும். அப்படி இருந்தும் ஹார்டு டிரைவ் பாதுகாப்பு உள்ளதா என்பதைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

‘மடியில்’ வேண்டாம்

மடிக்கணினி என்ற பெயரிருந்தாலும், அதிக நேரம் மடியில் வைத்துப் பயன்படுத்த வேண்டாம். மடியில் இருந்து வெளியாகும் வெப்பம் தொடைகளைப் பாதிக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

பைல் பேக்கப்


ஒரு வேளை மேலே கூறிய முயற்சிகளையும் தாண்டி உங்க மடிக்    கணினி பழுதடைந்தால் முன்னெச்சரிக்கையாக உங்களுக்கு தேவையான பைல்களை பேக்கப் எடுத்து வைத்திருப்பது கைகொடுக்கும். அதோடு, முறைப்படி அங்கீகாரம் பெற்ற சர்வீஸ் சென்டரிலேயே உங்கள் மடிக்கணினியைக் கொடுத்து பழுது நீக்கிக் கொள்ளுங்கள்.