ஐபோனில் உள்ள ஆபத்து: ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை!
சமீபத்தில் உலக நாடுகள் அனைத்திலும் ஸ்மார்ட்போன்கள் மூலம் நமது தகவல்களை திருடப்படுகின்றன என்ற தகவல்கள் அனைவருக்கும் அதிர்ச்சிகரமான செய்தியே. அதேசமயம் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் மிகவும் பாதுகாப்பானவை அதில் எந்த தகவலையும் அவ்வளவு எளிதாக திருட முடியாது என்று கூறி கொண்டிருந்த ஆப்பிள் நிறுவனமும் தற்போது ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
சீனாவில் இருந்து கிளவுட் சேமிப்பில் உள்ள தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐபோன் மற்றும் ஐபேட்களில் சேமிக்கப்படும் தகவல்கள் பாதுகாப்பானதாக தான் இருக்கின்றன. ஆனால் கிளவுட் சேமிப்பில் இருக்கும் தகவல்களும் பாதுகாப்பானதாக தான் உள்ளன. ஆனால் சில இணையதளங்களில் டிஜிட்டல் சர்ட்டிபிகேட் இருப்பதில்லை அதன் மூலம் தகவல்கள் திருடப்படலாம் என ஆப்பிள் நிறுவனம் எச்சரித்துள்ளது.
என்ன செய்ய வேண்டும்?
ஆப்பிள் நிறுவனத்தின் ப்ரெளசரான சஃபாரி ப்ரெளசரில் டிஜிட்டல் சான்றிதழ் இல்லாத இணையதளங்கள் அனுமதி மறுக்கப்படும். அதேசமயம் மற்ற ப்ரெளசர்களில் இந்த வசதி இல்லை என்றும் அதனால் உங்கள் க்ளவுட் தகவல்களை பாதுகாக்க அதிகாரப்பூர்வ ப்ரெளசர்கலை பயன்படுத்துங்கள் என்று ஆப்பிள் எச்சரித்துள்ளது.
கடந்த மாதம் ஹாலிவுட் நடிகை ஒருவரின் பர்சனல் புகைப்படங்கள் ஐபோன் க்ளவுட் பதிவில் இருந்தவை இண்டர்நெட்டில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.