Breaking News

கரண்ட் பில் தொந்தரவா இருக்கா? பாதியா குறைக்க இதோ சூப்பர் டிப்ஸ்!

                                        ElectricBill

உங்கள் வீட்டில் அதிகமான கரண்ட் பில் இருந்தால் அதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸின் மூலம் குறைத்துக்கொள்ளலாம்.
1. தொலைக்காட்சி, கணனி மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை பயன்படுத்திய பிறகு முழுவதுமாக சுவிட்ச் ஆப் செய்து விடவும்.
2. A/C யூனிட்டுகளை 18 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைப்பதை தவிர்த்து, 24 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைத்தால் நிச்சயமாக கரண்ட் பில் பாதியாக குறைய வாய்ப்புள்ளது.
3. மேலும் A/C யை பொருத்தும் போது சூரியஒளி நேராக படும் இடங்களை தவிர்த்து, கட்டிட நிழல்களிலோ அல்லது மரத்தின் நிழல் படும்படியான இடங்களிலோ பொருத்தினால் நன்று.
4. இதேபோன்று பழைய எலக்ட்ரிகல் அயர்ன் பாக்சை மாற்றிவிட்டு, புதிய எலக்ட்ரானிக் ஆட்டோமேடிக் அயர்ன்பாக்சை உபயோகிக்கலாம்.
5. குளிர்சாதன பெட்டிகளை பயன்படுத்தும் போது மிதமான தட்பவெப்பநிலையில் வைக்கவும், மேலும் சுவரினை விட்டு பிரிட்ஜீக்கு போதிய இடைவெளி மற்றும் காற்று இருக்கும்படி வைக்கவும்.
6. தரமான CFL மற்றும் LED பல்புகளை உபயோகப்படுத்தவும்.
7. வாஷிங்மெஷின்களை பயன்படுத்தும் போது, அதற்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட டிடர்ஜென்ட் பவுடர்களை பயன்படுத்தினால் நலம்.
8. வெயில்காலத்தின் போது Heater பயன்படுத்துவதை குறைக்கலாம்.
9. எலக்ட்ரானிக் பிரஷர் குக்கரை பயன்படுத்தினால் மின்பயன்பாட்டை குறைப்பதுடன், துரிதமாகவும் சமைக்க உதவுகிறது.