செல்போன் கட்டணங்கள் உயர வாய்ப்பு: இந்திய செல்ஃபோன் சேவை நிறுவனங்கள் சங்கம் தகவல்
செல்போன் கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இந்திய செல்போன் சேவை நிறுவனங்களின் சங்கம் கூறியுள்ளது.
அலைக்கற்றை ஏலம் விரைவில் நடக்க உள்ள நிலையில் இதற்காக செல்போன் நிறுவனங்கள் அதிகளவில் செலவளிக்க வேண்டியுள்ளதாக அச்சங்கம் கூறியுள்ளது. செலவுகள் உயரும் பட்சத்தில் கட்டணங்களை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அச்சங்கம் தெரிவித்துள்ளது