இது இந்திய நாடா ? இல்லை இந்து நாடா ?
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள 10 ரூபாய் நாணயத்தில் இந்து மத காளி உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்தியா என்பது எந்த மதத்தையும் சாராத மதச்சார்பற்ற ஜனநாயக நாடு ஆகும். அப்படியிருக்கையில் இந்து மத காளி உருவத்தினை 10 ரூபாய் நாணயத்தில் பொறிப்பது இந்திய இறையாண்மைக்கு எதிரானது.
இந்தியாவில் இந்துக்கள் மட்டுமின்றி முஸ்லிம்கள், கிறித்தவர்கள், சீக்கியர்கள், புத்தர்கள், கடவுள் மறுப்பு கொள்கையை கொண்டவர்கள் என்று பல கொள்கையை கொண்டவர்கள் கொண்ட தேசத்தில் குறிப்பிட்ட மத அடையாளத்துடன் நாணயம் அச்சிடுவது இந்திய இறையாண்மைக்கு எதிரானது.
இந்திய ரூபாய் நோட்டுக்களில் இருந்த அசோக சக்கரத்தை நீக்கிவிட்டு காந்தியின் உருவத்தை வைக்க சொன்ன RSS, காந்தி மீது கொண்ட நேசத்தினால் அல்ல....
அசோக சக்கரம் என்பது புத்த மதத்தின் அடையாளம் என்பதால் அதை சகித்து கொள்ள முடியாத போது காந்தியின் படத்தை வைக்க சொன்னார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு ரூபாய் நாணயத்தில் கிறித்தவ மத சிலுவை இருப்பதாக கூறி இரண்டு ரூபாய் நாணயத்திற்கு எதிராக சங்கபரிவாரங்கள் கொக்கறித்த போது....
குறிப்பிட்ட மதத்தின் உருவத்தை வைத்ததற்கு மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.
காளி உருவம் பொறித்த நாணயத்திற்கு எதிராக திராவிட சொந்தங்களும், தமிழின சொந்தங்கள் போராட்ட களத்தில் குதிக்க வேண்டும்.
உடனடியாக அந்த நாணயத்தை நீக்கி விட்டு பூக்கள் போன்ற பொதுவானவைகளை அச்சிட்டு இந்திய இறையாண்மையை காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.