உங்கள் லேப்டாப்,கணனி / டேப்ளட் மற்றும் ஸ்மார்ட் ஃபோனில் எபோலா வைரஸ்!
எபோலா வைரஸ் காய்ச்சல் உயிர் கொல்லி என்பது நமக்கு தெரியும். இது மிகவும் ஆபத்தான ஒரு தொற்று நோய் காய்ச்சல் – இது வந்தவர்கள் 70 -90 % பேர் பிழைக்கும் வாய்ப்பே இல்லையென்பது உண்மை. இப்போது இன்னொரு ஆபத்து உங்கள் கணனி / டேப்ளட் மற்றும் ஸ்மார்ட் ஃபோனில் எபோலா வைரஸ் காற்றில் பரவும் ஆபத்து வளர்ந்து கொண்டு இருக்கிறது என்பது அதிர்ச்சியான உண்மை.
அது எப்படி தொற்று நோய் வைரஸ் கணனி வைரஸோடு சேரும் வகையில் என கேட்டால் – எபோலா பற்றி உலக சுகாதார நிறுவனம் உங்கள் பெயரில் ஒரு எச்சரிக்கை சுற்றறிக்கை மின்னஞ்சலில் வரும் வகையில் அமைக்கபட்ட இந்த வைரஸ் பொருந்திய மெயிலை நீங்கள் திறந்தாலே கதை முடிந்தது. அது ஒரு கணத்தில் உங்கள் கணனியின் கன்ட்ரோலை அப்படியே எடுத்து கொண்டுவிட்டு உங்கள் கணனியை செயல் இழக்க செய்வது மட்டுமல்ல உங்கள் கணனியின் பாஸ்வொர்ட் / வங்கி கணக்கு என அத்தனையும் ஹேக்கர் வசம் செல்கிறது.
இதன் மூலம் கணனியை மட்டுமல்ல உங்கள் வாழ்க்கைக்கே பெரும் சோகமாக அமையும். அதனால் எபோலா காய்ச்சல் அல்லது அதன் வைரைஸை பற்றி எந்த ஒரு மின்ஞ்சலோ அல்லது லின்க் உள்ள குறுஞ்செய்தி வந்தாலோ உடனே அழித்து விடுவது உங்களுக்கு மிகவும் நல்லது.