Breaking News

மெக்காவை பார்த்து அதிசயித்த விண்வெளி வீரர்கள்...!!

அல்லாஹ்வுடைய அபய பூமியும், உலக முஸ்லிம்களின் புனித பூமியுமான இரு புனித நகரங்களான மக்கா மதினா அமைந்துள்ள உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜிய நாடான சவூதி அரேபியாவின் அறிவியல்
ஆய்வகத்திற்கு ரஷ்யாவின் விண்வெளி வீரர்கள் வருகை புரிந்திருந்தனர்.

அனடோலி இவானிஷின் என்ற ரஷ்ய விண்வெளி வீரர் அங்குள்ள
மாணவர்களிடம் பேசுகையில்.

நாங்கள் விண்வெளியில் பயணிக்கும் போது கால நிலை சிறப்பாக இருக்கும் நேரங்களில் பூமியை படம் பிடிப்பது உண்டு.

அவ்வாறு நாங்கள் படம் பிடிக்கும்
போது அமெரிக்கா, பிரான்ஸ்,
ஐரோப்பாவின் சில இடங்களையும் படம் பிடிக்க முயற்சிப்போம்.

லென்ஸ் அந்த அளவு பவர்
இல்லாததால் எங்களால்
துல்லியமாக படம் எடுக்க முடியவில்லை.

அதேசமையம் வளைகுடா பக்கம் எங்கள் பார்வையை செலுத்தினோம். அப்போது நாங்கள் ஆச்சர்யப்படும் வகையில் இரண்டு இடங்கள் மட்டும் மிகவும்
பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்தது. இது எனக்கு அதிசயமாகவும் தெரிந்தது.

அந்த இரண்டு இடங்களையும் வைத்து மேலும் பல புகைப்படங்களையும் எடுத்தோம்.
அதன் பிறகு பல ஆய்வுகளுக்கு பிறகு அந்த இரண்டு இடங்கள் மெக்கா, மற்றும் மதினா என்ற இடங்கள் என்பதை அறிந்து நான்
ஆச்சரியப்பட்டு போனேன்.

உலகின் மற்ற பாகங்களில் இந்த
மாற்றத்தை நாங்கள் காணக் கூடியதாக இல்லை. இது எனக்கு ஒரு நெகிழ்ச்சியான அனுபவம் என்றார்.

அதன்பிறகு மதினா இளவரசர் பேசுகையில்..
மதினா நகரத்தின் தோற்றத்தை நீங்கள் எனக்கு விளக்கிய போது மெய் சிலிர்த்து போனேன். நீங்கள் உங்கள் கண்களால் மட்டுமே பார்க்கிறீர்கள்.

நான் அதோடு எனது இதயத்திலும் அந்த நிகழ்வை உள்வாங்கிக் கொண்டேன். மனித வாழ்வின் பல அரிய தத்துவங்களை
நீங்கள் அனைவரும் மேலும் ஆய்வு செய்ய வேண்டும்.தொலை தொடர்பு சாதனங்களை இதற்கு அதிகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

உலகில் உள்ள எத்தனையோ நகரங்கள் இதை விட
அதிக ஒளி வெள்ளத்தில் மிதக்கிறது. ஆனால் குர்ஆனில் இறைவன் இந்த இரண்டு நகரங்களையும் புனித நகரங்களாக அறிவிக்கிறான்.
அத்தகைய புனித நகரங்கள் ஒளி
வெள்ளத்தில் இந்த விண்வெளி வீரர்களுக்கு காட்சியளித்தது
ஆச்சரியப்படத்தக்க ஒன்றல்ல.

அதே போன்ற குர்ஆனின் உண்மை ஒளியை இந்த வீரர்களுக்கும், உலகின் பல கோடி மக்களுக்கும் அவர்களின் இதயத்தில் வல்ல
இறைவன் ஏற்றுவானாக!' என்ற
பிரார்த்தனையோடு முடித்தார்.

கருத்துகள் இல்லை