பேஸ்புக் ஷாப்பிங்: பேஜ் மூலம் பொருட்களை வாங்கலாம் / விற்கலாம்.
நட்பு ,சினிமா, அரசியல், அரட்டை என பல விசியங்களை ஒருங்கிணைக்கும் முகநூல் (பேஸ்புக்). தற்போது மாறிவரும் காலத்திற்கு ஏற்ப தனது சிறகை அடுத்த பரிமாணத்திற்கு ஆயத்தமாக உள்ளது.
வெறும் பொழுதுப்போகிற்கு மட்டும் இல்லாமல் விரைவில் இனி பொருட்களை விற்கும் தளமாக விரைவில் மாற உள்ளது.
இதன் முன்னோட்டமாக தான் பேஸ்புக் பேஜ்ஜில் ஷாப் என்ற பகுதி மூலம் பொருள் மற்றும் விலை இரண்டையும் பதிவு செய்து மற்றவர்களுக்கு காட்டும் வகையில் தற்போது உள்ளது. இதை மேலும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல “Buy” பட்டன் விரைவில் பேஸ்புக் பேஜ்ஜில் காட்டப்படும்.
இதன் மூலம் நேரடியாக பொருட்களை வாங்கும் வகையில் பேஸ்புக் முயற்சி செய்து வருகிறது.
விரைவில் பொருட்களை வாங்க Flipkart ,Amazon தளங்களுக்கு செல்லாமல் பேஸ்புக் மூலம் எளிதாக வாங்கும் நிலை வரலாம்.
கருத்துகள் இல்லை