Breaking News

யாகூப் மேமனின் கடைசி நிமிடங்கள்...

நேற்றைய இரவு 9 மணி அளவில் பிரனாப் என்பவனிடம் கொடுக்கப்பட்ட இறுதி மனுவும் அதிகாலை இரண்டு மணியுடன் சப்தமே இல்லாமல் நிராகரிக்கப்பட்டது.

அதன்படி காலை 7 மணிக்கு தூக்கு என்ற நிலையில் காலையில் நிரபராதி யாகூப்பின் நெருங்கிய சகோதரர் சுலைமான் என்பவர் அவரை சந்திக்க வந்தார்.

வந்தவரிடம் யாகூப் கண்களில் கண்ணீருடன் நான் ஏதும் தவறுகள் செய்து இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள் என்று கூறினார்.

தூக்கில் தொங்க விடும்முன் மருத்துவர்களால் உடற் பரிசோதனை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் மருத்துவர்கள் விரைந்த போது ,"எனது உடல் நலம் தூக்கில் போட ஒத்துழைக்கும் எனக்கு எந்த பிரச்சனையும் உடம்பில் இல்லை" என்னை மருத்துவ சோதனை செய்ய அவசியம் இல்லை என்று கூறி விட்டார்.

தூக்கில் போடுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் நிரபராதி யாகூப் மேமன் குர்ஆன் வசனங்களை ஓதிய வண்ணம் இருந்ததாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடைசியாக செய்யாத தவறுக்காக ,தான் தவறு செய்யவில்லை என்பதை சொல்வதற்காக அவராக வந்து சரணடைந்த யாகூப் மேமன் இந்த உலகை விட்டு காலை 6:30 மணிக்கு பிரிந்து சென்றார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
(இறைவனிடம் இருந்தே வந்தோம் மீண்டும் அவனிடமே செல்பவர்களாக இருக்கின்றோம்).

கருத்துகள் இல்லை