Facebook தளத்தில் HD வீடியோ வசதியை செயற்படுத்திக் கொள்வது எவ்வாறு?
இன்று ஒரு சிறந்த ஊடகமாக இணையம் மாறியுள்ளது. அதிலும் Facebook தளத்துக்கு சென்று விட்டால் அதில் இல்லாத ஒரு தகவல் இல்லை என்றே கூற வேண்டும்.
அந்த வகையில் Facebook தளத்தில் நாம் பல்வேறு விதத்தில் தகவல்களை அறிந்து கொள்கின்றோம். அவைகள் பிரதானமாக எழுத்துக்கள் அடிப்படையாகக் கொண்டதாகவும் புகைப்படங்களை அடிப்படையாகக் கொண்டதாகவும், வீடியோ கோப்புக்களை அடிப்படையாகக் கொண்டவைகளாகவும் அமைந்துள்ளன.
Facebook தளம் மூலம் நாம் வீடியோ கோப்புக்களை பார்க்கையில் அவைகள் சாதாரண தரத்தில் (SD Video) அமைந்தவைகளாகவே காணப்படுகின்றன.
இருப்பினும் அவற்றினை உச்ச தெளிவுத் திறனில் வீடியோ கோப்புக்களை பார்ப்பதற்கான வசதியும் Facebook தளத்தில் தரப்பட்டுள்ளது.
எனவே குறிப்பிட்ட வசதியை செயற்படுத்திக் கொள்வதன் மூலம் உச்ச தெளிவுத் திறனில் அமைந்த வீடியோ கோப்புக்களை அதே தரத்தில் பார்க்கலாம்.
இதனையும் பார்க்க: Facebook தளத்தில் பகிரப்படும் வீடியோ கோப்புக்களை எவ்வித மென்பொருள்களும் இன்றி தரவிறக்கிக் கொள்வது எவ்வாறு?
இதனை நீங்கள் செயற்படுத்திக்கொள்ள விரும்பினால் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுக.
முதலில் உங்கள் Facebook கணக்கிற்குள் நுழைந்து கொள்க.
பின் Settings பகுதிக்கு சென்று இடது கீழ் மூலையில் தரப்பட்டுள்ள
Video என்பதனை சுட்டுக.
இனி Video Default Quality என்பதில் HD if available என்பதனை சுட்டுக.
அவ்வளவு தான்.
இனி HD தரத்தில் அமைந்த வீடியோ கோப்புக்களை அதே தரத்தில் பார்க்கலாம்.
என்றாலும் அதில் தரப்பட்டுள்ள Default என்பது செயற்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் நீங்கள் வீடியோ கோப்புக்களை இயக்கும் போது தோன்றும் HD Icon ஐ சுட்டுவதன் மூலமும் குறிப்பிட்டவீடியோ கோப்புக்களை உச்ச தெளிவுத் திறனில் பார்க்கலாம்.
உதவிக் குறிப்புகள்:
Facebook தளத்தில் பகிரப்படும் அனைத்து வீடியோ கோப்புக்களும் HD வடிவில் அமைந்திருக்காது.
உங்களிடம் இருப்பது குறைந்த வேகத்தில் அமைந்த இணைய இணைப்பு எனின் Default எனும் முறையே சிறந்தது.
கருத்துகள் இல்லை