Breaking News

தமிழ்நாட்டில் 12 ஸ்மார்ட் நகரங்கள்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் பட்டியலை இன்று (ஆகஸ்ட் 27, 2015) அரசு வெளியிட்டுள்ளது. மொத்தம் 98 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் அதிக ஸ்மார்ட் நகரங்களை கொண்டிருக்கும் மாநிலங்களில் இரண்டு இடங்களில் உத்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு உள்ளன.

ஸ்மார்ட் சிட்டி அமைக்கப்பட இருக்கும் 98 நகரங்களில் 24 மாநில தலைநகர்களும் அடங்கியுள்ளன. இவற்றில் 13 நகரங்கள் உத்திரப்பிரதேசத்திலும், 12 நகரங்கள் தமிழ்நாட்டிலும், 10 நகரங்கள் மஹாராஷ்டிராவிலுமாக திட்டமிடப்பட்டுள்ளன. முதல் வருடம், அரசு 24 நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்தும்.

இந்தப் பட்டியலை வெளியிட்ட மத்திய வீட்டு வசதி துறை அமைச்சர் வெங்கையா நாயுடு. "ஸ்மார்ட் சிட்டி திட்டம் நடைமுறைப்படுத்துவது மிகவும் அவசியமானது. இதற்கு பொதுமக்களின் ஆதரவு தேவை" என்றார் அவர்.

தமிழ்நாட்டில் தேர்வாகியுள்ள 12 நகரங்கள்:
1. திருச்சி, 2. திருநெல்வேலி, 3. திண்டுக்கல், 4. தஞ்சாவூர், 5. திருப்பூர், 6. சேலம், 7. வேலூர், 8. கோயமுத்தூர், 9. மதுரை, 10. ஈரோடு, 11. தூத்துக்குடி, 
12. சென்னை.

கருத்துகள் இல்லை