துபாய் ஷேக் ராஷித் பின் முஹம்மது பின் ரஷீத் மாரடைப்பால் மரணம்!!
துபாய் மன்னரும் அமீரகத்தின் துணை பிரதமருமான ஷேக் முஹம்மது அவர்களின் புதல்வர் ஷேக் ராஷீத் அவர்கள் இன்று 19-09-2015 சனிக்கிழமை மாரடைப்பால் மரணமடைந்தார்.
இவரது மரணத்தை யொட்டி துபாயில் அமீரக கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. மூன்று நாட்களுக்கு துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. 34 வயதுடைய ஷேக் ராஷித் அவர்களின் மரண செய்தி கேட்டு அமீரகமே துயரத்தில் ஆழ்ந்துள்ளது.



கருத்துகள் இல்லை