Breaking News

சாம்பியன்ஸ் கோப்பை தொடர்... வரலாறு படைத்த பாகிஸ்தான்


சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி, பாகிஸ்தான் அணி முதல் முறையாக கோப்பையை வென்றது. 
பாகிஸ்தான் நிர்ணயித்த 338 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் டாப் ஆர்டரை முகமது அமீர் விரைவில் வெளியேற்றி அதிர்ச்சி கொடுத்தார். மிகப்பெரிய இலக்கைத் துரத்திய இந்திய அணி 33 ரன்கள் எடுப்பதற்குள் ரோகித் ஷர்மா, விராத் கோலி மற்றும் ஷிகர் தவான் ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்தது. குறிப்பாக முதல் ஓவரிலேயே ரோகித் ஷர்மா முகமது ஆமிர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் ரன் எதுவும் எடுக்காமலும், விராத் கோலி 5 ரன்களிலும், ஷிகர் தவான் 21 ரன்களிலும் வெளியேறினர். இந்த சரிவிலிருந்து இந்திய அணியை மீட்கும் பொருட்டு கைகோர்த்த யுவாரஜ் சிங் - தோனி ஜோடியும் ஏமாற்றியது.                                                 
                  
அணியின் ஸ்கோர் 54ஆக இருந்தபோது யுவராஜ் 22 ரன்களிலும், தோனி 4 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். இதையடுத்து கைகோர்த்த ஹர்திக் பாண்ட்யா - கேதர் ஜாதவ் ஜோடி நீண்ட நேரம் நிலக்கவில்லை. இந்திய அணியின் ஸ்கோர் 72ஆக இருந்த போது 9 ரன்கள் எடுத்த நிலையில் கேதர் ஜாதவ் வெளியேறினார். 72 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணிக்கு, ஹர்திக் பாண்ட்யா சிறிது நேரம் ஆறுதல் அளித்தார். அவர் 43 பந்துகளில் 76 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான், 30.2 ஓவர்களில் 158 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தான் அணி, முதன்முறையாக சாம்பியன்ஸ் கோப்பையை வென்று வரலாறு படைத்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது ஆமீர் மற்றும் ஹசன் அலி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.