புனே அருகே நிலச்சரிவு: பலியானோர் எண்ணிக்கை 136 ஆக உயர்வு.
புனே அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் பலியானவர்களின் எண்ணிக்கை 136 ஆக உயர்ந்து உள்ளது. எஞ்சியவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
புனே மாவட்டம் ஆம்பேகாவ் தாலுகா மாலின் மலையடிவார கிராமத்தில் கடந்த வாரம் புதன்கிழமை அதிகாலை கனமழை பெய்தபோது, திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த கிராமத்தில் இருந்த 44 வீடுகள் மற்றும் ஒரு கோவில் ஆகியவை மண்ணுக்குள் புதையுண்டு போனது. சம்பவம் நடந்தது அதிகாலை நேரம் என்பதால், அந்த கிராமத்தில் வசித்த பழங்குடியின மக்கள் தூக்கத்திலேயே மண்ணுக்குள் புதையுண்டு போனார்கள்.
அவர்களை மீட்கும் பணி முழுவீச்சில் தொடங்கியது. நேற்று வரை 130 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இந்நிலையில், நேற்று மீட்பு பணி 7–வது நாளாக நீடித்தது. அப்போது, மேலும் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதன் மூலம் புனே நிலச்சரிவில் பலியானவர்களின் எண்ணிக்கை 136 ஆக உயர்ந்து உள்ளது. அவர்களில் 53 ஆண்கள், 65 பெண்கள் மற்றும் 18 குழந்தைகள் அடங்குவர்.
கருத்துகள் இல்லை