Breaking News

திருச்சி ஏர்போட்டில் பரபரப்பு! விமானத்தின் மீது கழுகு மோதி கண்ணாடி டமால்! 168 பயணிகள் அதிர்ஷ்ட வசமாக பயணிகள் உயிர் தப்பினர்!



திருச்சி: சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு இயக்கப்படும் டைகர் ஏர்வேஸ் விமானம் காலை 10.15 மணிக்கு திருச்சி வந்து, மீண்டும் 11.15 மணிக்கு சிங்கப்பூர் புறப்பட்டுச் செல்லும். அதன்படி இன்று காலை திருச்சி வந்த விமானம், காலை 11.15 மணிக்கு 168 பயணிகளுடன் மீண்டும் சிங்கப்பூர் புறப்பட்டது.ரன்வேயில் சென்று கொண்டிருந்த சில விநாடிகளில், கழுகு ஒன்று விமானத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் பைலட் ரூம் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதையடுத்து விமானத்தின் வேகத்தை சாமர்த்தியமாக குறைத்த பைலட், சிறிது நேரத்தில் நிறுத்தினார்.

அதன்பின் 168 பயணிகளும் விமானத்திலிருந்து கீழே இறக்கிவிடப்பட்டனர். உடைந்த கண்ணாடிக்கு பதிலாக டெல்லி அல்லது சிங்கப்பூரிலிருந்து மாற்று கண்ணாடி வரவழைக்கப்பட்ட பின்பே, அந்த விமானத்தை எடுத்துச் செல்ல முடியும் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த விமானத்தில் செல்ல வேண்டிய 169 பயணிகளும், இன்று மாலை சிங்கப்பூர் செல்லும் டைகர் ஏர்வேஸ் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட உள்ளனர். கண்ணாடி உடைந்தவுடன் விமானத்தை பைலட் நிறுத்தியதால், 168 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 

கருத்துகள் இல்லை