இஸ்லாத்தில் பெண்களுக்கு என்ன தடை???!!!
இஸ்லாத்தில் பெண்கள் வேலைக்கு செல்ல தடையில்லை.
அப்படி வேலைக்கு சென்று சம்பாதித்தால் அதை குடும்பத்திற்கு செலவழிக்கவேண்டிய கடமை அவர்களுக்கு கிடையாது.
**இஸ்லாத்தில் பெண்கள் வெளியே செல்ல தடையில்லை.
**இஸ்லாத்தில் பெண்கள் கல்வி கற்க தடையில்லை.
**இஸ்லாத்தில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு தடையில்லை.
**இஸ்லாத்தில் பெண்கள் விளையாட்டில் பங்குகொள்ள தடையில்லை.
**இஸ்லாத்தில் பெண்கள் கணவனை தேர்ந்தெடுக்க உரிமை உண்டு.
**இஸ்லாத்தில் பெண்களுக்கு சொத்துரிமை உண்டு.
இப்படி அடிக்கிக்கொண்டே போகலாம்...!
இஸ்லாத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்கு எந்த தடையுமில்லை இஸ்லாம் சொல்வது ஒன்றே ஒன்றுதான் – ஆண்கள் தான் பெண்களை நிறுவகிக்க வேண்டும் என்பதே.
இது இஸ்லாத்தில் இல்லாத மக்களும் பின்பற்ற கூடிய ஒன்றுதானே... இது தான் எதார்த்த உலகத்தில் நாம் அன்றாடம் பார்ப்பது ..
இதில் விமர்சிக்க என்ன இருக்கிறது ?
முஸ்லீம்கள் செய்யும் தவறுகளுக்கு இஸ்லாத்தை குறைகூறாதீர்கள்..!
இஸ்லாத்தின் சட்டதிட்டங்களை அறியாமல் ,புரியாமல் ,அதை யாரேனும் ஏதும் செய்தால் அவர்கள் தவறு செய்திருக்கிறார்களே ஒழிய, இஸ்லாம் அவர்களுக்கு எந்த தீங்கையும் செய்யவில்லை.
பெண்களும்–ஆண்களும் சமம் அவர்களை வேறுபடுத்தி பார்க்ககூடாது கோசம் போடுபவர்களிடம் நான் சில கேள்விகளை முன்வைக்கிறோம்..
1. இயற்கையாகவே ஆணுக்கும் ,பெண்ணுக்கும் மூளையிலையே வித்தியாசம் இருக்கிறது என்கிறது இன்றைய அறிவியல் இதற்கு நீங்கள் யாரைகுறை சொல்ல போகிறீர்கள்..?
2. சரி ஆணும், பெண்ணும் சமம் என்கிறீர்கள் அப்படியானால் ஒன்றாக விளையாட விட்டு பார்க்க வேண்டியது தானே..!
CRICKET,TENNIS,FOOTBALL என்று எதை எடுத்துகொண்டாலும் ஏன் தனிதனியாக நடத்துகிறீர்கள் அனைவரும் சமம் அல்லவா ?
3. ஆணும்,பெண்ணும் சமம் – பிறகு எதற்கு ஆண்களுக்கும், பெண்களுக்கு தனி தனி கழிவறைகள் ?- எதற்கு தனித் தனித் உடைகள்..?
4.அப்போ உங்களுக்கு தேவையானதை,சரி என்று சரி காணுவீர்கள்..!மற்றதை கண்மூடி தனமாக எதிர்ப்பீர்கள் இது ஏற்றுக்கொள்ள கூடியதா?
5. ஆண்கள் –பெண்கள் சமம் பிறகு ஏன் ?
சினிமாவில் , பொதுவாழ்வில் பெண்களுக்கு மட்டும் அரைகுறை ஆடை – ஆண்களுக்கு கிடையாதா ? ஏன்பாரபட்சம் ?
6. ஆமாம், ஏன் ஆண்கள் பிள்ளை பெற்றுக் கொள்வதில்லை ?
இது பெண்களுக்கு நிகழ்த்தப்படும் கொடுமையல்லவா ? ஆண்கள் மட்டும் என்ன
உயர்தினையா ? உங்கள் அறிவியல் வளர்ச்சியில் எல்லாமே சாத்தியமாகுமா?
செய்து காட்டுங்களேன் ! இன்னும் கேட்டுகொண்டே போகலாம் ஆனால் பதில்கள்
இன்னுமில்லை... இஸ்லாத்தை விமர்சிக்கும் அத்தனை அறிவுஜீவிக்கும் சொல்லிகொள்கிறோம், இஸ்லாம் பெண்களின் உடலுக்கு திரையிட
சொன்னதே தவிர அறிவிற்கு திரையிட சொல்லவில்லை ..! நீங்கள் உங்கள் பார்வையில் இஸ்லாத்தில் குறைகளை கண்டால் அதை எங்களிடம் முன்வைப்பதற்கு முன் முதலில் நீங்கள் அதற்க்கான சிறந்த தீர்வை கொண்டு வாருங்கள். அதாவது – இது இஸ்லாத்தில் தவறு – இப்படி இருந்தால் தான் சரி என்ற தீர்வோடு வாருங்கள்.
--------
(நபியே!) முஃமின்களான
ஆடவர்களுக்கும் இன்னும் முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள்
தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத்தலங்களைப்
பேணிக்காத்துக் கொள்ளவேண்டும்.
அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்.(அல்குர்ஆன்-24:30)
கருத்துகள் இல்லை