Home/
Unlabelled
/மங்கள்யான் விண்கலம் செப்டம்பர் 24ம் தேதி செவ்வாய்கிரகத்தில் இறங்க உள்ளது. விஞ்ஞானி தகவல்.
மங்கள்யான் விண்கலம் செப்டம்பர் 24ம் தேதி செவ்வாய்கிரகத்தில் இறங்க உள்ளது. விஞ்ஞானி தகவல்.
புதுக்கோட்டை: மங்கள்யான் விண்கலம் இந்த ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி செவ்வாய்கிரகத்தில் இறங்க உள்ளது என்று விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் தெரிவித்தார். புதுக்கோட்டையில் நடந்த செவ்வாய் கிரகத்தில் மங்கள்யான் என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் ஒரு பிரிவான டெல்லி விஞ்ஞான் பிரச்சார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் கலந்து கொண்டார். அப்பேது அவர் பேசியதாவது:இந்தியா விண்வெளித் திட்ட வரலாற்றில் முதன் முதலாக செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் விண்கலத்தை வெற்றிகரமாக ஏவியது. இந்தத் திட்டம் வெற்றி அடைந்தால், செவ்வாய் கோளுக்கு விண்கலம் அனுப்பிய நாடுகளின் பட்டியலில் 4வது நாடாக இந்தியா இணையும்.
2008 அக்டோபர் 22ம் தேதி நிலவுக்கு சந்திராயன் 1 விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பி உலக நாடுகளை ஆச்சரியப்படவைத்தது இஸ்ரோ. இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய விண்வெளி முகமை ஆகியவை மட்டுமே செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பியிருக்கின்றன. சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளின் திட்டம் தோல்வியில் முடிந்தது. மங்கள்யான் விண்கலம் இந்த ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி செவ்வாய்கிரகத்தின் மையத்தில் இறங்க உள்ளது. செவ்வாய் கிரகத்தில் இருந்து பல்வேறு புதிய தகவல்கள் மங்கள்யான் மூலம் கிடைக்கும்.இவ்வாறு வெங்கடேஸ்வரன் பேசினார்.
மங்கள்யான் விண்கலம் செப்டம்பர் 24ம் தேதி செவ்வாய்கிரகத்தில் இறங்க உள்ளது. விஞ்ஞானி தகவல்.
Reviewed by Admin
on
5:51 AM
Rating: 5
கருத்துகள் இல்லை