Breaking News

சுபி என்ற பெண்ணின் குவைத்தில் 25 நாட்கள் … ஒரு பாடமாக இருக்கட்டும்.




சுபி என்ற இந்த பெண்ணின் அனுபவம் 47 நாட்கள் சினிமா கதை போலவே உள்ளது.

கோழிக்கோட்டில் உள்ள ஒரு ஏஜன்ஸி மூலம் 75,000 ரூபாய் செலுத்தி பியூட்டீசியன் வேலைக்காக பம்பாடியைச் சார்ந்த சுபி என்பவர் ஜூன், 16 அன்று குவைத் சென்றுள்ளார். ஆனால் அங்கு சென்றதும் அந்த ஏஜண்ட் அந்த பெண்ணை ஒரு அரேபிய தம்பதியினரிடம் 3 லட்ச ரூபாய்க்கு வீட்டு வேலைக்கு விற்றுவிட்டார்.. சுபி அந்த தம்பதியினரிடம் தான் ஏமாற்றப் பட்டுள்ள விபரத்தைக் கூறியுள்ளார். உடன் அந்த தம்பதியினர் சுபியை அந்த ஏஜண்ட்டிடம் திருப்பிக் கொடுத்து பணத்தையும் திரும்ப பெற்றுக் கொண்டனர்.

அதன் பின் அந்த ஏஜண்ட் அந்த பெண்ணை ஒரு ரூமில் அடைத்து வைத்துக் கொண்டு, வெளியில் விடுவதற்கு ஊரில் டிரைவர் வேலை செய்து வரும் அந்த பெண்ணின் கணவனிடம் 55,000 ரூபாய் கேட்டுள்ளார். ஒரு வார இடையில் அந்த பெண்ணை கண்காணிப்பதற்காக வைக்கப் பட்டிருந்த சிங்களப் பெண் குடி போதையில் இருந்த போது, அந்த சிங்களப் பெண்ணின் போன் மூலம், எப்படியோ சுபி தனது கணவனையும், பின் குவைத்தில வசிக்கும் தனது ஊரைச் சார்ந்த ஒருவரையும் தொடர்பு கொண்டு விபரங்கள் கூறியுள்ளார். அவரது ஊரைச் சார்ந்தவர் பணம் 55,000 ரூபாய் தருவதாக கூறியதன் பேரில், ஏஜண்ட் சுசியை தனது ஆபீஸுக்கு அழைத்து வந்துள்ளார். ஆனால் அங்கிருந்து தப்பிய சுபி இந்தியன் தூதரகத்தை அடைந்து விட்டார். பிறகு கேரள முதல் அமைச்சர் முயற்சியில் ஜூலை, 20 சுபி கேரளா திரும்பியுள்ளார். அந்த கோழிக்கோடு ஏஜன்ஸி மீது பம்பாடி போலீஸ் வழக்கு பதிந்துள்ளது.

சுபி என்ற இந்த பெண்ணின் அனுபவம் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும் என்றும், வெளி நாடு செல்வோர் விசா மற்றும் ஏனைய டாக்குமெண்டகளை சரி வர சோதித்து சரி பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் பம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை