Breaking News

திருச்சியில் இருந்து துபாய் புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான இன்ஜினில் திடீர் கோளாறு! 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.



திருச்சி, ஆக. 11:


திருச்சியில் இருந்து துபாய் புறப்பட இருந்த விமான இன்ஜினில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதனால் இரண்டே கால் மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டு சென்றது.


திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து நேற்று மதியம் 1.30 மணிக்கு ஏர்இண்டியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. இந்த விமானம் வழக்கமாக மதியம் 1.30 மணிக்கு வந்து 2.45 மணிக்கு மீண்டும் துபாய் புறப்பட்டு செல்லும். நேற்று இந்த விமானம் வழக்கமான நேரத்தில் வந்து, மீண்டும் 150க்கும் மேற் பட்ட பயணிகளு டன் புறப்பட தயா ரான போது திடீரென விமானத்தில் டெக்னிக்கல் கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார்.


இதையடுத்து விமான நிலைய இன்ஜினியர்கள் கோளாறை சரி செய்த பின்னர், இரண்டேகால் மணி நேரம் தாமதமாக மாலை 5 மணிக்கு ஏர்இண்டியா எக்ஸ்பிரஸ் விமானம் துபாய்க்கு புறப்பட்டு சென்றது.


இதுகுறித்து விசாரித்த போது, விமானத்தின் இடது பக்க என்ஜினில் ஆயில் கசிந்தது விமானியின் கட்டுப்பாட்டு அறையில் உள்ள மானிட்டரில் தெரியவந்தது. இதையடுத்து இன்ஜினியர்கள் மூலம் கோளாறு சரி செய்யப்பட்ட பின்னர் விமானம் புறப்பட்டு சென்றது என்றனர்.


என்ஜினில் ஏற்பட்ட கோளாறை விமானி சரியான நேரத்தில் கண்டுபிடித்ததால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது. விமானம் தாமதத்தால் துபாய் செல்ல இருந்த பயணிகள் அவதிக்குள்ளாகினர்.


இதே போல் மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வரும் ஏர்ஏசியா விமானம் வழக்கமாக மாலை 4.35 மணிக்கு வந்து 5.30 மணிக்கு புறப்பட்டு செல்லும். ஆனால் நேற்று முன்தினம் இந்த விமானம் இரவு 7.30மணிக்கு வந்து 8.20 மணிக்கு புறப்பட்டு சென்றது. இதுகுறித்து விசாரித்த போது, நிர்வாக காரணங்களுக்காக தாமதமாக வந்து சென்றதாக கூறப்பட்டது.


No comments