Breaking News

பேஸ்புக் பயனர் அனைவருக்கும் ரூ.41,000 இழப்பீடாக பேஸ்புக் தர வேண்டும் !! வழக்கு தொடர்ந்தார் சட்ட மாணவன் !!


ஆஸ்திரிய சட்டக் கல்லூரி மாணவன் ஒருவன் பேஸ்புக் தனி நபரின் உரிமைகளை மீறி உள்ளதாக நீதிமன்றம் ஒன்றில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார் .




மேஸ் ஸ்கிரிம்ஸ் என்னும் அந்த மாணவன் பேஸ்புக் இழப்பீடாக 500 யுரோ , இந்திய மதிப்பின் படி 41,000 ரூபாய் பேஸ்புக் பயனர் அனைவருக்கும் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளான் . மேலும் 1.32 லட்ச கோடி பயனர்களும் இந்த சட்ட போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார் .




பேஸ்புக் நிறைய தனி நபர் உரிமைகளை மீறி உள்ளது . எடுத்துக்காட்டாக கிராப் சர்ச் வசதி , பிரிசம் புரோகிரமில் கலந்து கொண்டது என பல மீறல்கள் உள்ளது . இவை அனைத்தையும் எதிர்த்து அவர் வர்க்கமாக வழக்கு பதிவு செய்துள்ளார் .