ஆப்பிள் ஐ போன் 6 எப்போது ? எவ்வளவுக்கு கிடைக்கும் தெரியுமா ?
தற்போது ஆண்ட்ராய்டில் எத்தனையோ வகையான மொபைல்கள் வந்தாலும் ஆப்பிளின் ஐ போன்களுக்கு எப்போதுமே உலகம் முழுவதுமே தனி வரவேற்பு இருந்து கொண்டே தான் இருக்கிறது.
ஐ போனின் கடைசி வரவுகளான 5C மற்றும் 5S ஆகியவை விற்பனையில் சக்கை போடு போட்டன எனலாம் இதனிடையி அனைவரது பார்வையும் விரைவில் வெளிவர இருக்கும் ஆப்பிளின் ஐ போன் 6 மீது திரும்பியுள்ளது எனலாம்.
வரும் செப்டம்பர் 9-ம் தேதி இவத ஐபோன் -6-அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிறுவனம் உள்ள கலிபோர்னியா மாகா ணத்தில் கூபர்டினோவில் இது அறிமுகமாகிறது என்றும் இதன் மதிப்பு மினிமம் சுமார் 70 ஆயிரம் (இந்தியா மதிப்பு) இருக்கலாம் என்றும் தெரிகிறது.
2007-ம் ஆண்டு முதல் ஐ-போன் மற்றும் ஐ-பாட்களை இந்நிறுவனம் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் மேக் கம்ப்யூட்டரை இந்நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப் அறிமுகப்படுத்தி இருந்தார்.
இதை அடுத்து ஆண்டு தோறும் புதிய தயாரிப்புகள் அறிமுகப்படுத்துவதை இந்நிறுவனம் வழக்கமாகக் கொண்டுள்ளது. அந்த வகையில் புதிதாக அறிமுகமாகும் லேட்டஸ்ட்டான ஐ-போன் 6, இரண்டு மாடல்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.முதலாவது மாடல் 4.7 அங்குல திரை கொண்டதாகவும், அடுத்தது 5.5 அங்குல திரை கொண்டதாகவும் வெளிவரும் எனவும் இதன் டிஸ்பிளே வளைந்த மாடலுடன் வெளிவர இருக்கிறது என்றும் தெரிய வருகிறது.
அதாவது இதில் முதன் முறையாக குவான்டம் டாட்ஸ் என்ற டெக்னாலஜி இதில் பயன்படுத்தபடுகின்றது.இதிலுள்ள நவீன சென்சார்கள் மொபைலை முகத்துக்கு நேரே கொண்டு வந்தாலே போதும் டிஸ்பிளே ஆன் ஆகிவிடும்.மேலும் இதன் கேமராக்களில் சில புதுமைகளை புகுத்தி இருப்பதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது.
இதன் விலை இந்திய மதிப்பில் எழுபதாயிரம் முதல் தொன்னுறாயிரம் வரை இருக்கலாம் என்று செய்தி வெளியாகியுள்ளது