Breaking News

நியூஸி. கிரிக்கெட் வீரர் ரோஸ் டெய்லரை வசீகரித்த ரஜினி !

'லிங்கா' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடப்பட்டது. அதனை இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, "நிச்சயம் முதல் நாள் முதல் ஷோ பார்க்க வேண்டிய படம்" என்று குறிப்பிட்டு #thailavarrajnikanth #superstar #favorite #legend ஆகிய ஹேஷ்டேக்குகளை பதிவு செய்திருந்தார்.



தினேஷ் கார்த்திக்கின் ட்விட்டர் பக்கத்தை பின் தொடரும் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ரோஸ் டெய்லர், 'லிங்கா' குறித்த அந்தப் பதிவுக்கு பதில் அளித்திருந்தார். அதில், மிகச் சிறந்தவர்களில் ஒருவர் என நடிகர் ரஜினியை ரோஸ் டெய்லர் குறிப்பிட்டிருந்தார்.

ரோஸ் டெய்லரின் பதிலுக்கு பதிலிட்ட தினேஷ் கார்த்திக், "உங்களிடம் இருந்து இதைக் கேட்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. தலைவர் ரஜினிகாந்த் படத்தைப் பார்ப்பதற்கு நீங்களும் தயாராகுங்கள்" என்று கூறியிருந்தார்.

ட்விட்டரில் இந்த உரையாடலை கவனித்த ரஜினி ரசிகர்கள், ரோஸ் டெய்லரையும் ரஜினிகாந்த் வசீகரித்திருப்பதை மேற்கோள்காட்டி பதிவுகளை கொட்டத் தொடங்கினர்.

ரஜினியைப் பற்றிய நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ரோஸ் டெய்லரின் ட்வீட்டுகள் தற்போது இணையத்தின் 'டாக்'காக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.