Home/
Unlabelled
/ உஷார்... உஷார்... ஆயிரம் ரூபாய் நோட்டா?
உஷார்... உஷார்... ஆயிரம் ரூபாய் நோட்டா?
உங்களிடம் உள்ள ஆயிரம் ரூபாய் நோட்டு உண்மையானதா போலியானதா என்று எப்படி கண்டுபிடிப்பீர்கள்? நல்ல நோட்டுகளில் வெற்றிடத்தில் உள்ள வெள்ளைப் பகுதியில் உற்றுப் பார்த்தால் காந்தியின் உருவம் தெரியும். அதன் அருகில் உள்ள பூ வேலைப்பாட்டினை வெளிச்சத்தில் வைத்துப் பார்த்தால் அதில் அந்த ரூபாய் நோட்டின் எண் தெரியும். நோட்டின் முன்பக்கத்தின் மையத்தில் அச்சிடப்பட்டுள்ள எண் இருவேறு கோணங்களில் இரு வேறு வண்ணங்களில் தெரியும். நோட்டின் முன்புறத்தில் ஒரு நேர்க்கோடு விட்டுவிட்டுச் செல்லும். அதில் அந்த நோட்டின் எண்ணும், இந்தியில் பாரத் என்றும் ஆர்பிஐ என்றும் அச்சிடப்பட்டிருக்கும். வெளிச்சத்தில் பார்த்தால் அந்தகோடு அறுபடாமல் நீல வண்ணத்தில் காட்சியளிக்கும்.
நல்ல நோட்டுக்களில் எண்கள் கைகளால் தொட்டு உணரப்படும் வகையில் இன்டாக்ளியோ முறையில் அச்சிடப்பட்டிருக்கும். ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா, ரூபாய் நோட்டின் மதிப்பு (இந்தியில்) மற்றும் காந்தியின் உருவமும் இன்டாக்ளியோ முறையில் அச்சிடப்பட்டிருக்கும்.
இடது புறத்தில் அசோகர் ஸ்தூபி சின்னத்துக்கு மேலே அடையாளக் குறியொன்று உயர்த்தப்பட்ட வடிவத்தில் எழுதப்பட்டிருக்கும். ரூபாய் நோட்டு அச்சிடப்பட்ட ஆண்டு நோட்டின் பின்புறத்தில் இடம்பெற்றிருக்கும். 2005க்கு முன் அச்சிடப்பட்ட நோட்டில் இது இருக்காது. இனிமே ஆயிரம் ரூபாய் நோட்டை வாங்கும்போது மேற்கண்ட விஷயங்கள் இருக்கான்னு... உஷாராய் பார்த்து வாங்குங்க.
உஷார்... உஷார்... ஆயிரம் ரூபாய் நோட்டா?
Reviewed by Admin
on
11:33 PM
Rating: 5
கருத்துகள் இல்லை