இஸ்ரேலிய பொருட்கள் புறக்கணிப்பு: வளைகுடாவில் இஸ்ரேல் சார்பு நிறுவனங்களுக்கும் பலத்த அடி!
இஸ்ரேலுடனான நேரடி வர்த்தகம் சவுதி போன்ற நாடுகளில் முற்றாக தடை செய்யப்பட்டுள்ள போதிலும் அந்நாட்டுடன் வர்த்தக உடன்பாடுகள் கொண்டு பல்வேறு துறைகளில் இயங்கும் நிறுவனங்கள் வளைகுடா நாடுகளில் இயங்கியே வருகின்றன.
இந்நிலையில், சுமார் 2000 பேரைப் பலிகொண்ட் காஸா மீதான இஸ்ரேலின் அண்மைய அராஜகமான தாக்குதல் பலத்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதோடு மேற்கு நாடுகள் தொடக்கம் உலகெங்கும் இஸ்ரேலிய உற்பத்திகளின் புறக்கணிப்புக்கு வித்திட்டுள்ளது.
இது நேரடியாக இஸ்ரேலை மாத்திரமன்றி இஸ்ரேலுடனான கூட்டுறவில் உதிரிப்பாகங்கள் மற்றும் இதர அன்றாட பொருட்கள் உற்பத்திகளில் ஈடுபடும் நிறுவனங்களையும் பலமாக தாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் வளைகுடாவிலும் இதன் பாதிப்பு பலமாக இருப்பதாக அங்கிருந்து வெளியாகும் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளிலும் மிகப் பிரபலமான நிறுவனங்கள் கூட இஸ்ரேலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை அனுமதித்தும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது நிறுவனங்களுக்குள் வந்து கோஷமிடுவதைக்கூட தடுக்காது அவர்களுக்கு ஆதரவாக இஸ்ரேலிய தயாரிப்பு உணவுப்பண்டங்களைக் கூட குப்பையில் கொட்டிய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் இஸ்ரேலிய பொருளாதாரத்துக்கு சர்வதேசத்தில் விழும் அடி மேலும் பலமாக இருக்குமாக இருந்தால் இஸ்ரேல் தொடர் அழுத்தத்துக்குள்ளாகும் என்பதும் இதுவே இஸ்ரேலிய இராணுவ பலத்தைவிடவும் ஆபத்தான ஆயுதம் எனவும் சர்வதேச வல்லுனர்கள் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை