சவூதியில் 13 இந்திய தொழிலாளர்கள் தவிப்பு தென் இந்திய ஏஜெண்டு ஏமாற்றினார்.
துபாய்,
தென் இந்தியாவை சேர்ந்த 13 தொழிலாளர்களுக்கு சவூதி அரேபியாவில் உள்ள ரியாத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் பணி வாங்கித்தருவதாகக் கூறி இந்திய ஏஜெண்டு ஒருவர் ஏமாற்றி விட்டார். இவர்கள் அந்த நாட்டின் பல்வேறு இடங்களில் கண்டபடி வேலை செய்கிற நிலை உருவானது.
உணவு, தங்குமிடம் போக மாதம் 800 சவூதி ரியால் சம்பளம் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.13 ஆயிரம்) தருவதாக அவர்களை அந்த ஏஜெண்டு அமர்த்தி உள்ளார். அவர்களுக்கு 6 மாதங்களாக சம்பளம் கிடைக்கவில்லையாம். இதனால் அவர்கள் இந்தியாவுக்கு திரும்புவதற்கு தேவையான செலவுகளுக்காக 7 ஆயிரம் ரியால்கள் (ரூ.1 லட்சத்து 12 ஆயிரம்) வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
தற்போது சவூதியில் தவித்து வருகிற அந்த தொழிலாளர்கள் பற்றி இஸ்லாமிய கலாசார அறக்கட்டளை செய்தி தொடர்பாளர் கூறுகையில், இந்த தொழிலாளர்களின் பணத்தை தென் இந்தியாவை சேர்ந்த உள்ளூர் ஏஜெண்டு ஒருவர் ஏமாற்றி விட்டார்.
இதனால் அவர்கள் கஷ்டம் அனுபவிக்கின்றனர். அவர்களுடைய விமானம், விசா கட்டணத்தை சவூதி ஏஜெண்டு கொடுத்து விட்டார். அவர்கள் இந்தியாவுக்கு திரும்ப தேவையான விமான கட்டணத்தை அவர்களது இந்திய ஏஜெண்டு கொடுத்துவிட்டால், அவர்களது சம்பள பாக்கியை தரத் தயார் என சவூதி ஏஜெண்டு தெரிவித்துள்ளார் என கூறினார்.
கருத்துகள் இல்லை