நாகூரில் கலவரத்தை ஏற்படுத்த திட்டம்..!!
இந்து சமுதாயத்தை சேர்ந்த மக்கள் பல வகையான கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள்..
அதற்க்கு ஏற்றாற்போல் பல விதமான பண்டிகைகளை அவர்கள் கொண்டாடுகிறார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
ஆனால் இந்த விநாயகர் சதுர்த்தி பண்டிகையும் அதை தொடர்ந்து நடத்தப்படும் ஊர்வலமும் நாடுமுழுவதும் இதுவரை பதட்டத்தை ஏற்படுத்தி வருவது தான் வரலாறு..
கலவரத்தை ஏற்படுத்த தான் இவர்கள் இந்த பண்டிகையை கொண்டாடுகிறார்களோ என்று என்னும் அளவிற்கு நடக்கும் சம்பவங்கள் இருக்கிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் நாடுமுழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடபட்டது.. வருட வருடம் நாகபட்டினத்திலிருந்து நாகூர் வெட்டாற்று பாலத்திற்கு ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு விநாயகர் சிலை கரைக்கபடுவது வழக்கம் அதே போல் நாகூர் மீனவ கிராமத்திலிருந்து கல்பண்டாக சாலை வழியாக வெட்டாற்று பாலத்திற்கு எடுத்து செல்வார்கள்.
நீங்கள் எப்போதும் இந்த வழியாக செல்லமாட்டீர்களே ? ஏன் இப்படி வருகிறீர்கள் உங்களுக்கு அனுமதி கொடுத்தது யார் ? எப்போதும் செல்வது போல் செல்ல வேண்டியது தானே என்று தடுக்க...
நீங்க போலீஸ்ட கேளுங்கள் .. இது மோடி ஆட்சி அப்டியாக்கும் , இப்படியாக்கும் என்று சீன் போட... பிரச்சனை ஆரம்பமாகியது...
இருப்பினும் கலவரத்தை விரும்பாத அனைவரும் சேர்ந்து சமரசமாக பேசி களைந்து சென்றுள்ளனர்.
இவ்வளவு வருடமாக இல்லாமல் இப்போது திடீர் என பிரச்சனையை ஏற்படுத்தும் எண்ணத்துடன் இவர்கள் மியா தெரு வழியாக வருகிறார்கள் இதை உடனே தடுத்து நிறுத்தாவிட்டால் ..
இதுவே ஒவ்வொரு வருடமும் வழக்கமாகி முத்துபேட்டையை எப்படி வருடம் வருடம் பதட்டபடுத்துகிறார்களோ அதுபோல் நாகூரையும் ஆக்கிவிடுவார்கள் என நினைத்து காவலதுறைக்கு முறைப்படி புகார் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கும் வேளையில்...
எதை எதிர்பார்த்தார்களோ அது நடக்கவில்லை என்றவுடன் சிலர் வேண்டுமென்றே மியாதெருவில் வந்து மீண்டும் பிரச்சனை செய்ய அது கைகலப்பாக மாறிபோனது.. பிறகு காவல்துறை தலையிட்டு அமைதியான தற்போது சூழல் நிகழ்கிறது...
தமிழகத்தை பொறுத்தவரை பல ஊர்களில் இஸ்லாமியர்களும் , இந்துக்களும் ஒன்றாகவே வாழ்கிறார்கள். அண்ணன் தம்பிகளாக பழகுகிறார்கள் , நம்பிக்கை வேறு வேறாக இருந்தாலும் நாம் சமூகவாழ்வில் ஒன்றிணைந்தே வாழ்கிறோம்.
முத்துபேட்டையில் வருட வருட ஏற்படுத்தும் இது போன்ற மோதல்களை நாகூரிலும் கட்டவிழ்த்து விட நினைகிறார்கள். ஒரு போதும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களை நாம் அனுமதிக்ககூடாது.
நம் ஊர் சகோதரர்கள் இதில் உணர்ச்சிவசபடாமல், சிந்தனை ரீதியாக செயல்பட்டு இது போன்று கலவரத்தை ஏற்படுத்தும் திட்டத்தை முறியடிக்க வேண்டும் இன்ஷால்லாஹ்.