Breaking News

‘புதிய தலைமுறை’ வார இதழ்களில் பயிற்சிப் பத்திரிகையாளராக விருப்பமா?

புதிய தலைமுறை’ வார இதழ்களில் பயிற்சிப் பத்திரிகையாளராக விருப்பமா?


•வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும், எழுத வேண்டும் என நினைப்பவரா?

•‘என்னிடம் செய்தி சேகரிக்கும் ஆர்வம், எழுத்தாற்றல் எல்லாம் இருக்கிறது. ஆனால், அதை வரவேற்று வாய்ப்புக் கொடுக்கத்தான் ஆளில்லை’ என்பதுதான் உங்களைப் பற்றிய உங்கள் கணிப்பா?

•‘நான் கற்றுக்கொள்ளத் தயார், சொல்லிக் கொடுக்க யார் இருக்கிறார்கள்?’ என்பதுதான் உங்கள் தேடலா?

•சமூகப் பொறுப்புடன் புதிய முயற்சிகளை செய்து பார்க்கும் ஒரு குழுவுடன் இணைந்து செயல்பட ஆர்வமுண்டா?

- இந்தக் கேள்விகளுக்கு உங்களின் பதில் ‘ஆம்’ என்றால், உங்கள் வயது 18க்கு மேல் 30க்குக் கீழ் என்றால், விண்ணப்பப் படிவத்தை நிரப்பி,

உங்கள் எழுத்துகளில்/படைப்புகளில் மிகச் சிறந்தது என நீங்கள் கருதும் ஒன்றை எங்களுக்கு அனுப்புங்கள். அது செய்திக் கட்டுரையாக இருக்கலாம். நீங்கள் எடுத்த புகைப்படமாக இருக்கலாம். கதை, கவிதைகள் வேண்டாம். நீங்கள் எங்கள் பார்வைக்கு அனுப்புவது உங்கள் திறமைக்கு சாட்சி சொல்வதாக இருக்க வேண்டும், அவ்வளவுதான். படைப்புகள் இல்லாத விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

அத்துடன் உங்கள் பிறந்த தேதி, வசிப்பிடம் இவற்றிற்கான சான்றுகளையும் இணைத்து அனுப்புங்கள். மாணவராக இருந்தால், உங்கள் கல்லூரி வழங்கியுள்ள அடையாள அட்டையின் நகலை அனுப்புங்கள்.

இந்தத் திட்டத்தில் பங்கேற்க விரும்புவோர் எந்த ஓர் அரசியல் கட்சியிலும், அரசியல் கட்சி சார்ந்த அமைப்புகளிலும் உறுப்பினராக இருக்கக் கூடாது.

ஆற்றலில் சிறந்த இளைஞர்களைத் (இளைஞர் என்றால் மேலே குறிப்பிட்டுள்ள வயதில் உள்ள ஆண், பெண், மாணவர், மாணவர் அல்லாதவர் எல்லோரும்தான்) தேர்வு செய்து, ‘புதிய தலைமுறை’ வார இதழ் அவர்களுக்குப் பயிற்சியும், வாய்ப்பும் அளிக்கும். இதழியல்/தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்களுக்கு முன்னுரிமை. தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மாதம் தோறும் ஒரு சிறு உதவித்தொகையும், பிரசுரிக்கப்படும் அவர்களது படைப்புகளுக்கு சன்மானமும் அளிக்கப்படும். பயிற்சிக்காலம் ஓராண்டு.

வேறு இதழ்களில் பணியாற்றுவோர், பணியாற்றியோர் ஆகியோரது விண்ணப்பங்கள் கருத்தில் கொள்ளப்பட மாட்டாது.

வாருங்கள்,
இனி ஒரு விதி செய்வோம்

அன்புடன்
- மாலன்

No comments