Breaking News

கடலுக்கு அடியில் கேபிள் வயர்களை கடித்து சேதப்படுத்தும் சுறாக்கள்: கவலையில் கூகுள்!

டெல்லி: சுறாக்களுக்கு பயந்து கூகுள் நிறுவனம் கடலுக்கு அடியில் உள்ள கேபிள்களை பாதுகாப்பான பொருள் கொண்டு கோட் செய்து வருகிறது.

கூகுள் நிறுவனத்தின் ஆப்டிக்கல் பைபர் கேபிள்கள் கடலுக்கு அடியில் உள்ளன. அந்த கேபிள்களை பல ஆண்டுகளுக்கு முன்பு சுறா மீன்கள் கடித்து சேதப்படுத்தின. இதையடுத்து சுறாக்கள் கூகுள் நிறுவனத்திற்கு தலைவலியாக மாறின. மேலும் கூகுள் கேபிள் வயர்களை சுறா மீன்கள் கடிப்பதாக அந்நிறுவனம் அண்மையில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கூகுள் நிறுவனம் புதிதாக கடலுக்கு அடியில் பதிக்கப்படும் கேபிள்களை சுறாக்கள் கடிக்காத அளவுக்கு திடமான பொருள்களை கொண்டு தயாரித்துள்ளது. சுறா மீன்கள் ஏன் கேபிள் வயர்களை கடிக்கின்றன என்று நினைக்கிறீர்களா. கேபிள்களில் இருந்து வந்து மின்காந்த சக்தி சுறா மீன்களை ஈர்க்கின்றன. அதனால் அவை கேபிள்களை கடித்து சேதப்படுத்துவதாக கூறப்படுகிறது. ஆனால் சுறா மீன் நிபுணர் ஒருவர் கூறுகையில், கேபிள் வயர்கள் என்ன வித்தியாசமாக உள்ளதே என்ற ஆர்வத்தால் அதை சுறாக்கள் கடிப்பதாக தெரிவித்தார். அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பானை இணைக்கும் கேபிள்களை சுறா மீன்களிடம் பாதுகாக்க கூகுள் திட்டமிட்டுள்ளது.