எர்டெல், ஏர்செல்,ஐடியா மற்றும் டாடா டோகோமோ வாடிக்கையாளர்கள் இனி இண்டர்நெட் இல்லாமல் பேஸ்புக்கை பயன்படுத்தலாம்!!
இனி இண்டர்நெட் இல்லாமல் பேஸ்புக்கை பயன்படுத்தலாம்!!
இனி இணையவசதி இல்லாமலே மொபைல் மூலம் பேஸ்புக்-யை அணுகலாம்.இந்த வசதியை பேஸ்புக் இந்தியாவும்,போனிடுவிஷ் இணைந்து தருகிறது.
இண்டர்நெட் வசதி இல்லாத எந்த ஒரு சாதாரண மொபல் போன்களிலும் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு.ஆனால் இந்த வசதியை தற்போது எர்டெல், ஏர்செல்,ஐடியா மற்றும் டாடா டோகோமோ ஆகிய மொபல் சேவையை பயன்படுத்தி வரும் இந்தியப் பயனாளர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.
இதற்காக நீங்கள் டயல் செய்ய வேண்டிய எண் *325# டயல் செய்தவுடன் உங்களுடைய பேஸ்புக் பயனர் பெயரையும்,கடவுச் சொல்லையும் உள்ளிட்டு பின் ஆன்லைனில் இருக்கும் உங்கள் நண்பர்களிடம் அரட்டை அடிக்கலாம்,புதிய நண்பரையும் சேர்த்துக் கொள்ளலாம். இதற்காக நீங்கள் எந்தவொரு அப்ளிகேசனையும் பதிவிறக்கம் செய்யத் தேவையில்லை.
இதற்கான நிர்ணயக்கப்பட்ட தொகை ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் மட்டுமே.பயன்படுத்தும் அளவுக்கு வரம்பு கிடையாது.வசூலிக்கப்படும் கட்டணம் கையடங்கும் வகையில் இருப்பதால் இனி பேஸ்புக் பயனாளர்க்கு கொண்டாட்டமே...